தமிழக அரசு வேலை! மருத்துவத் துறையில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!!
ரூ.1.77 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை! மருத்துவத் துறையில் கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள்!!
தமிழ்நாடு மருத்துவப் பணியாளர் தேர்வாணையம் (TN MRB) சார்பில் 123 உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு எம்.பி.பி.எஸ், எம்.டி போன்ற மருத்துவத் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மே 19ம் தேதிக்குள் ஆன்லைன் வழியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் (TN MRB)
பணி : உதவி அறுவை சிகிச்சை நிபுணர்
மொத்த காலிப் பணியிடங்கள் : 123
கல்வித் தகுதி :
M.B.B.S (Bachelor Of Medicine/Bachelor Of Surgery),
M.D Anaesthesiology
M.D Obstetrics and Gynaecology
M.D Community Medicine
வயது வரம்பு :
01.07.2020 தேதியின்படி வயது வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, எஸ்.சி, எஸ்.டி, எம்பிசிஉள்ளிட்ட பிரிவினர் 57 வயதிற்கு உட்பட்டும், முன்னாள் இராணுவத்தினர் குடும்பத்தினர் 48 வயதிற்கு உட்பட்டும், இதர வகுப்பினர் 35 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500 வரையில்
விண்ணப்பிக்கும் முறை : மேற்குறிப்பிட்ட பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தின் வழியாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2020 மே 19ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : 21.05.2020 முதல் 23.05.2020 ஆகிய நாட்களில் நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Office of the Medical Services Recruitment Board, 7th floor, DMS Building , DMS Complex, 359, Anna Salai, Teynampet, Chennai- 600006. and 21.05.2020 to 23.05.2020.
விண்ணப்பக் கட்டணம் :
பொது மற்றும் ஓ.பி.சி. விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ.1000
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் (எஸ்.டி. / எஸ்.சி./ பி.டபிள்யு.டி) விண்ணப்பக் கட்டணம் - ரூ. 500
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
முக்கியத் தேதிகள்:-
அறிவிப்புகள் வெளியிடப்பட்ட தேதி : 12.05.2020
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 19.05.2020
நேர்முகத் தேர்வு நடைபெறும் நாள் - 21.05.2020 முதல் 23.05.2020
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.mrb.tn.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.
No comments: