Breaking

அறிவியல் அறிவோம் - மகுடி இசைக்குப் பாம்பு ஆடுவது ஏன்?

பாம்புகளுக்கு வெளிப்படையான காதுகள் கிடையாது. அதனால் இசையைக் கேட்க இயலாது. பாம்பாட்டியின் மகுடி அசைவையும் அடிக்கடி மகுடியைத் தரையில் தட்டும்போது ஏற்படும் அதிர்வையும் உணரும் பாம்பு, பயத்திலும் எதிரியை எதிர்த்து நிற்க வேண்டும் என்ற எண்ணத்திலும் உடலை அசைக்கும்.

இது மகுடியின் இசைக்குப் பாம்பு ஆடுவதுபோல் தோன்றும். பெரும்பாலும் பாம்பாட்டிகள் பயன்படுத்தும் பாம்புகளின் நச்சுப் பற்கள் அகற்றப்பட்டிருக்கும். அதனால் பாம்பாட்டி தைரியமாகப் பாம்பு முன்பு அமர்ந்து மகுடியை இசைத்துக்கொண்டிருப்பார்,

No comments:

Powered by Blogger.