இன்று:- மார்ச்-22. உலக நீர் நாள் (World Day for Water).
💧💧💧💧💧💧💧💧💧💧
இன்று:- மார்ச்-22. உலக நீர் நாள்(World Day for Water).
💧💧💧💧💧💧💧💧💧💧💧
உலகில் வாழும் மனிதனிலும்
மனிதன் வாழும் உலகினிலும்
உள்ளடங்கியிருப்பது எழுபது சதம் நீரே..
ஒவ்வொரு துளியும் நமக்கினி உயிர் நீரே...
உலகிலுள்ளோர் இதை உணர்வீரே...
உயிர் நீரை சேமித்திடுவீரே...
வரும் தலைமுறைக்கு 'நீர் வழி' காட்டிடுவீரே..!
💧வரலாறு:
💧1992 ஆம் ஆண்டில் பிரேசில் ரியோ டி ஜெனீரோ நகரில் இடம்பெற்ற சுற்றுச்சூழல் மற்றும் வளர்ச்சி குறித்து நடைபெற்ற ஐநாபேரவைக் கூட்டத் தொடரில் வைக்கப்பட்ட 21ம் நூற்றாண்டு செயல் திட்டத்தின்படி,
1993, ஜனவரி 18 ஆம் நாள் 47வது ஐ.நா பேரவை கூட்டத் தொடர் 193ம் தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்துடன் 1993ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டின் மார்ச் 22ம் நாளும் உலக நீர் வள நாளாக கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டது.
💧நோக்கம்:-
💧நீர் வளத்தின் ஒட்டுமொத்தத் திட்டத்தையும், நிர்வாகத்தையும் மேம்படுத்தி, நீர் வள பாதுகாப்பை வலுப்படுத்தி, நாள்தோறும் கடுமையாகியுள்ள நீர் பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பது என்பது தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நோக்கமாகும்.
அதேவேளையில் மக்களிடையே விரிவாக பிரச்சாரம் செய்து அந்தந்த நாட்டின் நீர் வளப் பாதுகாப்பையும் அதனை பெருக்குவது குறித்த விழிப்புணர்வு வளர்த்தி ஏற்படுத்தவும் கேட்டுக்கொள்ளப்பட்டது.
💧💧💧💧💧💧💧💧💧💧
"நீர் இன்றி அமையாது உலகு" என்பதற்கு ஏற்ப, நீரின்றி நாம் வாழ இயலாது.
💧பூமியில் 30 விழுக்காடு மட்டுமே நிலப்பரப்பாகும். மீதமிருக்கும் 70 விழுக்காடும் நீர்பரப்புதான். ஆனால், இன்று அந்த 30 விழுக்காட்டில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான நீரை அளிக்கும் போதிய வசதியை பூமி இழந்து வருகிறது.
💧உலக நாடுகளில் 40 சதவீத மக்கள் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். ஆனால் உரிய முறையில் நீரை மறுசுழற்சி செய்தால் அந்த தட்டுப்பாடு குறையும் என்கின்றனர் நீரியல் ஆய்வாளர்கள்.
💧💧💧💧💧💧💧💧💧💧
ஐ. நா. வின் நீர்த்திட்டம்:-
💧 2003 இல் 58வது ஐநா பேரவைக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற தீர்மானம் ஒன்றின் படி 2005 முதல் 2015 வரையான காலப்பகுதி "பத்தாண்டுகளுக்கு உயிர் வாழ்வதற்கு நீர்" எனும் அனைத்துலக செயல் திட்ட காலமாக அறிவிக்கப்பட்டது.
💧 2005 ஆம் ஆண்டு மார்ச் 22ம் நாளன்று இந்த நடவடிக்கை அதிகாரப்பூர்வமாக நடைமுறைக்கு வந்தது.
💧 நீர்த் திட்டம் குறித்து ஈடுபட்டுள்ள நிறுவனங்களில் ஏதாவது ஒன்று ஒவ்வோர் ஆண்டும் அனைத்துலக மட்டத்தில் நீர் வளப் பாதுகாப்புக் குறித்த செயல்திட்டங்களை ஒருங்கிணைத்து அதனை உலக நீர் நாளில் முன்னெடுப்பதும் ஐநா நிறுவனத்தின் திட்டம் ஆகும். இத்திட்டத்தின்படி 2006 ஆம் ஆண்டுக்கான உலக நீர் நாள் யுனெஸ்கோவினால் "நீரும் கலாசாரமும்" (Water and Culture) என்ற கருப்பொருளில் முன்னெடுக்கப்பட்டது.
💧 2007 இல் "நீர் பற்றாக்குறையுடன் ஒத்துழைப்பது" (Coping with Water Scarcity) என்ற தொனிப்பொருளில் FAO அமைப்பினால் முன்னெடுக்கப்பட்டது.
கருப்பொருள்கள்:-
ஒவ்வொரு ஆண்டும் குறிப்பிட்ட ஒரு கருப்பொருளைக் கொண்டு இந்த நாள் நினைவில் கொள்ளப்படுகின்றது.
2006 - நீரும் பண்பாடும்,
2007 - தண்ணீர்த் தட்டுப்பாட்டை எதிர்கொள்ளல்,
2008 - சுகாதாரத்திற்கான ஆண்டு,
2009 - தண்ணீர் மற்றும் வாய்ப்புகள் பகிர்ந்துகொள்ளல்
2010 - தரமான நீர்,
2011 - நகரங்களுக்கு தண்ணீர்- நகர்ப்புற மாற்றங்களுக்கு பதிலளித்தல்,
2012 - தண்ணீர் மற்றும் உணவு பாதுகாப்பு,
2013 - நீர் நிறுவனம்,
2014 - நீரும் ஆற்றலும்,
2015 - நீரும், நிலையான மேம்பாடும்,
2016 - சிறந்த நீர், சிறந்த தொழில்கள்,
2017 - ஏன் நீரினை வீணாக்க வேண்டும்?
2018 - இயற்கைக்காக தண்ணீர்..
💧💧💧💧💧💧💧💧💧💧💧
நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்:-
💧பல் துலக்கும் போது குழாயை அடைத்துவிட்டு பல் துலக்கலாம் இதனால் நிமிடத்திற்கு 6 லிட்டர் தண்ணீரை சேமிக்க முடியும்.
💧 தண்ணீர் குழாயை பயன்படுத்தி முடித்த பிறகு மறக்காமல் குழாயை அடைப்பதும் வீணாக திறந்திருக்கும் குழாய்களை பார்த்தால் அதை அடைப்பதும் தண்ணீர் சேமிப்பிற்கு வழிவகுக்கும்.
💧தண்ணீர் தொட்டிக்கு மோட்டார் மூலம் தண்ணீர் ஏற்றும்போது தண்ணீர் நிரம்பி வீணாகாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
💧புதியதாக கட்டும் வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டியையும் சேர்த்து கட்டுவதன் மூலம் நீர் வீணாகாமல் பார்த்து கொள்வதோடு சேமிக்கவும் முடியும். நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
💧 உலக தண்ணீர் தினத்தை ஒரு நாளாக மட்டும் கடைபிடிக்காமல் ஒவ்வொரு நாளும் தண்ணீரின் தேவையையும், சிக்கனத்தையும் மனதில் வைத்தே செயல்பட வேண்டும்.
💧 தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து ஒவ்வொரு துளி தண்ணீரையும் காப்பது நம் தலையாய கடமை.
💧 நீரின் ஆதாரமான ஓடைகள், ஆறு, குளம், குட்டை, வாய்க்கால், மழை நீர், சரிசெய்து நீர் மேலாண்மை ஒழுங்கு படுத்துதல்.
💧 ஆற்றில் மணல் கொள்ளை தடுத்தல்.
💧 அதிகமான நிலத்தடி நீரை உறிஞ்சி வணிக நோக்கோடு விற்பனை செய்வதை தடுத்தல்.
💧 நீர்- ஓர் அறிய வளம்.
💧 ஒரு துளி நீரையாவது சேமிப்போம்.
💧💧💧💧💧💧💧💧💧💧
🙏 க. ஜெய்சீலன்,
அறிவியல் ஆசிரியர்,நகராட்சி நடுநிலைப் பள்ளி,
பெத்லேகம்-ஆம்பூர், வேலூர்-மாவட்டம்.
📲செல்:8122121968🙏
💧💧💧💧💧💧💧💧💧💧
No comments: