Breaking

அறிவியல் உலகில் மிகசிறந்த விஞ்ஞானி, அறிவாளி என்பதற்கு உதாரணமாக சொல்லப்படும் ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் அவர்களை பற்றிய சிறப்பு தொகுப்பு




பள்ளிக்கூடம் என்னை தோற்கடித்தது. நான் பள்ளிக்கூடத்தை தோற்கடித்தேன். ஆசிரியர்கள் காவல்காரர்கள் போல் போல நடத்தினார்கள். நான் எதை தெரிந்து கொள்ள வேண்டுமோ அதை கற்க விரும்பினேன். ஆனால் அவர்கள் தேர்வுக்காக என்னை தயார் படுத்துவதில் குறியாக இருந்தனர், என்று தனது பள்ளி கால அனுபவங்களை நினைவு கூர்ந்த அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த தினம் இன்று.

இளமை காலத்தில் மற்ற விஞ்ஞானிகளைப் போல ஆராய்ச்சிக் கூடங்களில் பணியாற்ற வாய்ப்பின்றி எண்ண ஓட்டங்களிடையே ஆராய்ச்சி செய்து வழி கண்டவர். இருபதாம் நூற்றாண்டின் மகத்தான அறிவியல் அறிஞர் அவரது சார்பியல் கோட்பாடு இயற்பியலில் புதிய கோணத்திற்கு கொண்டு சென்றது. அதுவரை ஐசக் நியூட்டனின் கோட்பாடுகளில் புதைந்திருந்த முரண்பாடுகளை களைத்து அறிவியலில் புதிய தளத்திற்கு கொண்டு சென்றது.

1979 ஆம் ஆண்டு மார்ச்-14 ஆம் தேதி ஜெர்மனி நாட்டில் குட்டன்பெர்க் என்கிற ஊரில் ஹேர்மன் ஐன்ஸ்டீன் மற்றும் பவுலின் கோச்சி தம்பதியினருக்கு மகனாக பிறந்தார். 


சிறிய வயதில் நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருந்த போது, தந்தை அவருக்கு விளையாட்டு பொருட்களுக்கு பதிலாக திசைகாட்டி கருவி ஒன்றினை கொடுத்தார். அது அவரது வாழ்க்கையை திருப்பி போட்டுவிட்டது. அக்கருவியை எப்படி சுற்றினாலும் முள் வடக்குதிசை நோக்கி திரும்பியது அது அவருக்கு அடக்க முடியாத ஆச்சரியத்தை அளித்தது. ஐன்ஸ்டீன் அறிவு கூர்மையாக இருந்தாலும் பள்ளிக்கல்வியில் மந்தமாகவே இருந்தார். அறிவியலையும் கணிதத்தையும் விரும்பிய அளவில் மொழிப் பாடங்களை விரும்பவில்லை. தானாகவே தனக்கு விரும்பியதை படிக்கத் தொடங்கினார். 

ஒரு சூழலில் மற்ற மாணவர்களுக்கு மோசமான முன்னுதாரணமாக அமைந்து விடுவார் என்று அச்சப்பட்டு பள்ளி நிர்வாகம் அவரை பள்ளியில் இருந்து வெளியேற்றி விட்டது. 

மேலும் இவருக்கு ஜெர்மனி நாட்டு ராணுவத்தில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஆனால் அவர் அதனை விரும்பாமல் அந்த நாட்டு குடியுரிமையை விலக்கிகொண்டு, பின் சுவிட்சர்லாந்து நாட்டின் குடியுரிமை பெற்றார். அங்குள்ள சூரிச் கல்லூரியில் தனது படிப்பை முடித்து, 1896 ஆம் ஆண்டு இயற்பியல் மற்றும் கணிதப் பேராசிரியராக வேண்டும் என்கிற நோக்கில் பயிற்சி பெற்றார். ஆனால் அதற்கு வாய்ப்பு கிடைக்காததால் சுவிட்சர்லாந்து காப்புரிமை அலுவலகத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணியில் அமர்ந்தார். மேலும் பணிபுரிந்து கொண்டே தனது அறிவியல் கண்டுபிடிப்புகளை தொடர்ந்தார்.


மேலும் அறிவியல் ஆராய்ச்சி கட்டுரைகளை வெளியிட்டார். 1905 ஆம் ஆண்டு முனைவர் பட்டம் பெற்றார். பிறகு அறிவியல் உலகத்தின் அவர் மெதுவாக ஆனால் உறுதியாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். சூரிச் பல்கலைக்கழகத்திலும்,பெராகுவே  பல்கலைக்கழகத்திலும் பேராசிரியராக பணியாற்றினார். சிறுவனாக இருந்தபோது நீ படிப்பதற்கு லாய்க்கற்றவன் என்று பள்ளிக்கூடம் விரட்டி அடிக்கிறது. பிறகு ஆசிரியராக வேண்டும் என்கின்ற பொழுது உன்னால் பாடம் சொல்லி தரமுடியாது என்று மறுக்கப்படுகிறது. எந்த உலகம் அவரை ஒதுக்கித் தள்ளியதோ, அதுவே பிற்காலத்தில் அவரை அணைத்துக் கொண்டது. 

ஐன்ஸ்டினின் பொது சார்புக் கொள்கை உலகையே உலுக்கியது. அதுவரை உலக இயக்கத்திற்கான அடிப்படை ஐசக் நியூட்டன் விதிகளை ஆதாரமாகக் கொண்டு அறியப்பட்டது. அதில் சில குறைபாடுகள் இருந்தன. இவரின் பொது சார்புக் கொள்கை நியூட்டனின் விதிகளில் உள்ள குறைபாட்டினை சுட்டிக்காட்டியதுடன், அதனை தவறு என்றும் வெளிப்படுத்தியது. அதேபோன்று அவரது சிறப்பு சார்புக் கோட்பாடு, புகழ்பெற்ற சமன்பாடு E=mc2 போன்றவை சென்ற நூற்றாண்டில் அறிவியல் வளர்ச்சிக்குப் பெருந்துணையாக இருந்தது.

ஐன்ஸ்டின் குவாண்டம் இயந்திரவியல், புள்ளியில் எந்திரவியல், அண்டவியல் துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கியுள்ளார். ஒளிமின் விளைவை கண்டுபிடித்து விளக்கியமைக் காகவும், கோட்பாட்டு இயற்பியலில் அவர் செய்த சேவைக்காகவும், 1921ஆம் ஆண்டு அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரது கண்டுபிடிப்புகள் மனிதன் அறிவியலின் புதிய பரிணாமங்களுக்கு செல்ல வழிவகுத்தது. 


1933 ஆம் ஆண்டு ஹிட்லர் ஜெர்மனியின் அதிபராக பதவி ஏற்பதற்கு ஒரு மாதம் முன்பு, இவர் அமெரிக்காவில் குடிபெயர்ந்தார். இரண்டாம் உலகப்போருக்கு முன்பாக, ஜெர்மனியில் அணுகுண்டு தயாரிக்க ஆராய்ச்சி நடைபெற்று வந்தன, இதனை அறிந்த ஐன்ஸ்டீன் கவலைகொண்டார். அமெரிக்காவும் அணுகுண்டு தயாரிக்க வேண்டும், இல்லையெனில் ஜெர்மனி உலகையே வசப்படுத்திவிடும், பல நாடுகளில் உருத்தெரியாமல் அழித்து விடும் என்று அதிபர் ரூஸ்வெல்ட் அவர்களிடம் மனு அளித்தார், அதன் பிறகு அமெரிக்காவும் ஆராய்ச்சியில் இறங்கியது. 

வெற்றியும் கண்டது. ஜப்பானில் குண்டு வீசி இரண்டாம் உலகப்போரை முடிவுக்குக் கொண்டு வந்தது. தான் இறக்கும் தருவாயில் அவ்வாறு தான் கடிதம் அளித்ததன் விளைவாகவே அமெரிக்க அணுகுண்டு தயாரித்தது, அதனால் ஜப்பானில் பல்லாயிரக்கணக்கானோர் இறந்தனர் என்கிற வருத்தம் ஐன்ஸ்டீனுக்கு இருந்தது. பெரிய தவறு இழைத்துவிட்டதாக வருந்தினார். வாழ்நாள் முழுவதும் அறிவியல் மனிதகுல மேம்பாட்டிற்கு மட்டுமே பயன்பட வேண்டும் என்று விரும்பினார். போரை எதிர்த்தார். காந்தியடிகள் மீது பெரும் அன்பும், மரியாதையும் வைத்திருந்தார்.


இப்படிப்பட்ட இவர், 1955 ஆம் ஆண்டு ஏப்ரல் 17ஆம் தேதி காலமானார். அப்போது ஐன்ஸ்டீனின் மூளையை, உடலில் இருந்து நீக்கப்பட்டு, ஆராய்ச்சிக்காக பத்திரப்படுத்தப்பட்டது. மூளையில் எண்கள், கணிதம் சம்பந்தமான பகுதிகளில் சாதாரண மக்களை விட அதிக அளவில் மாறுபாடுகள் இருந்தது.

எனவே, வருங்காலத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகளுக்கும், மதிப்பெண்களுக்கும் மாணவர்களை தயாரிக்காமல், அவர்களது விருப்பத்திற்கு தக்கவாறு அறிவியல் சிந்தனைகளோடு உருவாக்கும்போது, அதிக அளவில் ஐன்ஸ்டீன்களை நாம் உருவாக்க முடியும் என்பதே உண்மை. நன்றி..

கட்டுரை தொகுப்பு:-

 க.ஜெயசீலன், 
அறிவியல் பட்டதாரி ஆசிரியர்,
நகராட்சி நடுநிலைப்பள்ளி- பெத்லேகம், 
ஆம்பூர், வேலூர்-மாவட்டம்.
7010007298.

No comments:

Powered by Blogger.