Breaking

ஓநாய் நோய் பற்றி தெரியுமா?




மயிர் மிகைப்பு நோய்,  (Hypertrichosis) அல்லது  ஓநாய் நோய் என்பது உடலெங்கும் அளவுக்கு அதிகமாக முடி வளர்ச்சி ஏற்படுத்தும் தாக்கம் கொண்டுள்ளது. 

ஓநாய் மனிதர் என்று கற்பனைக்கதைகளில் தோன்றுபவர்களின் முகத்தைப்போல இக்குறைபாடு உடையவர்கள் தோற்றப்பாடு கொண்டிருப்பதால் ஓநாய் நோய் என்றும் பேச்சு வழக்கில் அழைக்கப்படுகின்றது. இது பிறப்புக்குறையாக பிறப்பிலோ அல்லது அதற்குப் பின்னரோ ஏற்படலாம்.


ஆண்ட்ரொஜென் ஹார்மோன் சுரப்பதினால் ஆண்களுக்கு  (androgens- hormone reaponsible for secondary sexual characters) வயது செல்லச்செல்ல மீசை, தாடி நெஞ்சுப் பகுதிகளில் முடிவளர்ச்சி ஏற்படுகின்றது, ஆனால் ஓநாய் நோயுள்ளவருக்கு இந்த ஹார்மோன்  சுரப்பதினால்  முடிவளர்ச்சி ஏற்படக்கூடும் இடங்களில் முடிவளருவதில்லை, மாறாக ஏனைய பகுதிகளில் வளருகின்றது. இதே ஹார்மோன் சுரப்பதினால்  பெண்களுக்கு ஏற்படும் முடிவளர்ச்சி அன்ட்ரொஜென் ஹார்மோன் மயிர்மிகைப்பு (Hirsutism) எனப்படுகின்றது.உதாரணமாக சில பெண்களுக்கு அளவுக்கு மீறிய முடி வளர்ச்சி இருக்கும்.

No comments:

Powered by Blogger.