SCIENCE ARTICLES - குறட்டைக்கும் அல்சைமர்சுக்கும் தொடர்பு உண்டா?
மூளையின் ஆரோக்கியத்திற்கும், நல்ல துாக்கத்திற்கும் தொடர்பு இருப்பது, மருத்துவ உலகில் அறியப்பட்ட உண்மை. ஆனால், 'ஸ்லீப் அப்னியா' எனப்படும் குறட்டை நோயால், 'அல்சைமர்ஸ்' என்ற நரம்புச் சிதைவு நோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்பது, அண்மையில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வரும், மே மாதம் நடக்கவுள்ள, அமெரிக்க நரம்பியல் அகாடமி கருத்தரங்கில் சமர்ப்பிக்கப்படவுள்ள ஓர் ஆய்வின்படி, தீவிர குறட்டையால் துாக்கம் அடிக்கடி தடைபடுவோருக்கு, மூளையில் சில நச்சுப் புரதங்கள் உண்டாகி தேங்கி விடுகின்றன.
இந்த புரதங்கள், நாளடைவில் அல்சைமர்ஸ் நோயை துாண்டி, நரம்புச் சிதைவை ஏற்படுத்தும் வாய்ப்பு அதிகமாகிறது.
ஆய்வாளர்கள், 65 வயதுக்கும் மேற்பட்ட, 288 பேரிடம் நடத்திய விரிவான ஆய்வை அடுத்து இந்த உண்மையைக் கண்டறிந்து உள்ளனர்.
No comments: