Breaking

SCIENCE ARTICLES - பிராய்லர் கோழி சாப்பிட்டால் உடல் நல பாதிப்பு ஏற்படுமா ?





பொதுவாக நம் நாட்டில் வளர்க்கப்படும் நாட்டு கோழிகளுக்கு, இயற்கை உணவுகள் கொடுக்கப்பட்டு வளர்க்கப்படுகிறது. இதனால் நாட்டு கோழிகளில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.இதன் மூலம் நமக்கு உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயால் பாதிக்கப்படுவர் என்பது அதிர்ச்சி கலந்த உண்மை. இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாததுதான். ஆறு மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய பிராய்லர் கோழிகள் பல்வேறு ரசாயணங்கள் மற்றும் ஊசிகள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன.


இவ்வாறு ரசாயணங்கள் மற்றும் ஊசிகள் மூலம் முழு வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழியின் சதையில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிக அளவில் உள்ளது. எனவே நாம் பிராய்லர் கோழிகளை உட்கொள்ளும் போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துகள் அதிக அளவில் சேர காரணமாகிறது. இவை நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி,  ஈரல் சம்பந்தப்பட்ட நோய் ஏற்பட வழிவகுக்கிறது. மேலும் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது நமது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது

நம் நாட்டில் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடும் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. ஆகவே கோழி கறி சாப்பிட விரும்புவோர், இயற்கையாக வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகளை சாப்பிடுவது சிறந்தது.

No comments:

Powered by Blogger.