Breaking

ஏப்ரல்-02 📚📚 உலக குழந்தைகள் புத்தக தினம்.





📒 நோக்கம்:-


📖 குழந்தைகளிடம் வாசிப்பு பழக்கம் பற்றி உணர செய்து கல்வி வளர்ச்சி,முன்னேற்றதுக்கு புத்தகம் உதவுவது புத்தகம் மட்டுமே என்பதை அறிய செய்தல்.

📒 வரலாறு:-

📖 உலக இளைஞர் புத்தக இயக்கம், உலக குழந்தைகள் புத்தகத் தினத்தை கொண்டாட திட்டமிட்டது.

📖 குழந்தைகளுக்காக தங்களது வாழ்வை அர்ப்பணித்த, டென்மார்க்கை சேர்ந்த ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் பிறந்த நாளை உலக குழந்தைகள் புத்தக தினம் கொண்டாட முடிவு செய்தனர்.

இதனால், ஏப்ரல்-02, 1967 ஆம் ஆண்டிலிருந்து கொண்டாடப்படுகிறது.

📖 ஒவ்வொரு ஆண்டும் குழந்தைகளுக்கு பல்வேறு போட்டிகளும், ஒரு குறிப்பிட்ட தலைப்பில் படைப்புகளுக்கு பரிசுகளும் வழங்கப்படுகிறது.

📒 நம் கடமை:-

📖 படிக்கும் ஆர்வத்தை தூண்ட வேண்டும்.
தெனாலிராமன் கதைகள் மூலம் அன்பு,வீரம்,நேர்மை, துணிவு குழந்தைகளிடம் புகுத்தலாம்.
அறிவியல்,வினாடி-வினா, விளையாடு புத்தகம் மூலம் அறிவை வளர்த்தல்.

📖 நல்ல புத்தகம் பரிசாக தரலாம்.
எனவே, நம் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் புத்தகம் பெரும் பங்கு வகிக்கிறது.

📖 இந்தநாளில் சிறப்பு வாய்ந்த புத்தகம் பரிசாக வழங்கியும், அவற்றை வாசிக்க வைத்து நாமும், நமது குழந்தைகளை எதிர் காலத்தில் சிறந்து விளங்கியும் நமக்கு பெருமை சேர்க்க ஒரு வழிகாட்டியாக இருப்போம்.

📚📚📚📚📚📚📚📚📚📚
க.ஜெயசீலன்,
அறிவியல் ஆசிரியர்,
நகராட்சி நடுநிலைப் பள்ளி,
பெத்லேகம்-ஆம்பூர்.
வேலூர்-மாவட்டம்.

செல்:- 812 21 21 968.
📚📚📚📚📚📚📚📚📚📚


No comments:

Powered by Blogger.