Breaking

மாணவர்களிடம் அறிவியல் பாடத்தில் ஆர்வத்தை உண்டாக்க ஏழு நிறங்களை பற்றிய பாடலை பாடலாமே..


மாணவர்களிடம் அறிவியல் பாடத்தில் ஆர்வத்தை உண்டாக்க ஏழு நிறங்களை பற்றிய பாடலை பாடலாமே..

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

#அறிவியல் #பாடல்கள்:- 04.

#எத்தனை #வண்ணமடி- 

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

எத்தனை எத்தனை வண்ணமடி
எழிலாய் இயற்கையில் காணுதடி!

🎋#பச்சை நிறத்தில் பசும் புற்கள்
பனித்துளி தாங்கி வணங்குதடி!

🌨மேகம் சூழ்ந்த வானத்தின்
மேனி நிறமே #நீலமடி!

🍋சிட்ரிக் அமிலம் சுமந்திருக்கும்
சிறிய எலுமிச்சை #மஞ்சளடி!

🍅தகதக வென்று #சிவப்பாக
தக்காளிப் பழமே ஜொலிக்குதடி!

🍳ஏழுநிறத்தில் அடங்காத
எழில் தரும் கூந்தல் #கருமையடி!

🥛நிறமே இல்லாத் தண்ணீரோ
உறைந்தால் #வெண்மையாகுமடி!

🌈ஏழுநிறத்தின் கலவையிலே
எண்ணற்ற வண்ணம் தோன்றுதடி!

🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈🌈

No comments:

Powered by Blogger.