ஆடிகள்(LENS) பற்றிய அறிவியல் பாடல்கள்..
#அறிவியல் #பாடல்கள்:- 03.
👁👁👁👁👁👁👁👁👁👁
ஆடிகள்..
👓👓👓👓👓👓👓👓👓
கடுத்தது காட்டும் முகம்போல
அடுத்தது காட்டும் கண்ணாடி
ஒவ்வொரு வீட்டிலும் பார்த்திடலாம்
உருவம் பார்க்கும் கண்ணாடி
சீவி முடித்து அலங்கரித்து
சிங்காரிக்க கண்ணாடி
உருவம் மாற்றிக் காட்டாமல்
இடவலம் மாற்றிடும் கண்ணாடி
ரசம் பூசிய கண்ணாடி
சமதள ஆடி கண்ணாடி
புறங்கை போன்றது குவியாடி
உள்ளங்கை போன்றது குழியாடி
பாட்டி அணிகிறாள் கண்ணாடி
பார்வைக் குறைவுக்குக் கண்ணாடி
தாத்தா அணிகிறார் கண்ணாடி
தெளிந்த பார்வைக்குக் கண்ணாடி
பார்வைக் குறையைப் போக்குவது!
ஆடி அல்ல, லென்சாகும்
#கிட்டப் பார்வைக்குக்
#குழிலென்சாம்.
#எட்டப் பார்வைக்குக்
#குவிலென்சாம்.
👁👁👁👁👁👁👁👁👁👁


No comments: