Breaking

ஜூன்-25. உலக வெண்புள்ளி தினம்



ஜூன்-25.

உலக வெண்புள்ளி தினம்


வெண்புள்ளி என்பது ஒரு தொற்றுநோயல்ல. ஒவ்வாமை காரணமாக தோலில் ஏற்படும் ஒருவித பாதிப்பால் மெலானின் என்னும் கருப்புநிற பொருளை உற்பத்தி செய்யும் திசு அணுக்களை அழிப்பதால் ஏற்படுகிறது. இது சிறியவர்முதல் பெரியவர்வரை யாரை வேண்டுமானாலும் தாக்கும். இதனை வெண்குட்டம் எனக் கூறுவது முற்றிலும் தவறு. இது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த 2003 முதல் இத்தினம் கொண்டாடப்படுகிறது.
தோல் நிறமி இழத்தல்

தோல் நிறமி இழத்தல் என்னும் இந்த சரும பாதிப்பு, தோலின் நிறமிகள் இழக்கப்பட்டு வெள்ளையாக மாறுவதால் ஏற்படும் பாதிப்பாகும். இது தோலின் நிறமி செல்கள் இறப்பதால் அல்லது தொடர்ந்து வேலை செய்ய முடியாததால் ஏற்படுகிறது. இந்த பாதிப்பு உடலில் ஏற்படுவதற்கான தெளிவான ஒரு காரணம் மட்டும் இல்லை என்றாலும், மரபணு, விஷத்தன்மை உடைய அழுத்தம், நரம்பு மண்டலப் பாதிப்பு அல்லது வைரஸ் காரணங்கள் போன்றவை இவற்றின் மூலமாக செயல்படலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது.[1][2] பொதுவாக தோல் நிறமி இழப்பதை இருவகையாகப் பிரிக்கலாம். ஒன்று கூறுபடுத்தப்பட்ட தோல் நிறமி இழத்தல், மற்றொன்று கூறுபடுத்தப்படாத தோல் நிறமி இழத்தல்.

உலகளவில், தோல் நிறமி இழக்கும் இந்தப் பாதிப்பு ஒரு சதவீதத்திற்கும் குறைவான அளவே உள்ளது.[3] ஒரு சில குறிப்பிட்ட பகுதி மக்கள் தொகையில் மட்டும் சராசரியாக இரண்டு முதல் மூன்று சதவீத மக்கள் தொகையில் பாதிப்பு ஏற்படுகிறது, அத்துடன் சில இடங்களில் உள்ள மக்களுக்கு 16 சதவீத மக்கள் தொகையில் கூட பாதிப்புகள் ஏற்படுகின்றன.[4] அடிசனின் நோய், ஹாஷிமோட்டோ தைராய்டியம் மற்றும் வகை 1 நீரிழிவு போன்ற நோய்கள் பெரும்பாலும் தோல் நிறமி இழத்தல் பாதிப்படைந்தவர்களைத் தாக்குகிறது. இதனைக் குணப்படுத்தும் தெளிவான முறை இல்லாவிட்டாலும், சில குறிப்பிட்ட சிகிச்சை முறைகள் பிரபலமாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றுள் மேற்பூச்சு ஸ்டீராய்டு மருந்துகள், கால்சினெரின் தடுப்பான்கள் மற்றும் ஒளிக்கதிர் சிகிச்சைகள் போன்றவை முக்கியமானவை.

No comments:

Powered by Blogger.