தண்டவாளங்களில் ஜல்லி கற்கள் போடப்படுவது ஏன் தெரியுமா..
தண்டவாளங்களில் ஜல்லி கற்கள் போடப்படுவது ஏன் தெரியுமா..
🚆🚆🚆🚆🚆🚆🚆🚆🚆🚆
🚂தண்டவாளத்தில் செல்லும் ரயில் அதிக எடையுடன் இருக்கும். மேலும் அது வேகமாகவும் செல்லும். அப்போது அழுத்தம் அதிகம் இருப்பதால், தண்டவாளங்கள் விலகாமல் இருப்பதற்கு, தண்டவாளங்களில் ஜல்லிக்கற்கள் போடப்படுகின்றன.
🚂பொதுவாக வெப்பத்தினாலும், நிலஅதிர்வு மற்றும் கடினமான வானிலையின் போதும் இரயில் தன்டவாளங்கள் சுருங்கவும் விரியவும் செய்யும். இதனால் தண்டவாளங்கள் விலக வாய்ப்புள்ளது. இதைத் தடுக்கவே தண்டவாளங்களில் கற்கள் உள்ளன.
🚂ரயில் தண்டவாளங்களில் இருக்கும் கூர்மையான கற்கள் மர விட்டங்கள் வழுக்கி சென்றுவிடாமல் தடுக்கும்.
🚂ஜல்லிக் கற்களை மேல் எழுப்பி தண்டவாளங்கள் அமைக்கப்படுவதற்கு காரணம், நீரின் தேக்கத்தால் தண்டவாளங்கள் மூழ்காமல் இருப்பதற்கு தான்.
🚂களைகளின் வளர்ச்சி மற்றும் இதர தாவரங்களின் வளர்ச்சியினால் தண்டவாளங்களில் ரயில் செல்வதில் இடையூறு ஏற்படாமல் தடுக்கவே ஜல்லிக் கற்கள் போடப்பட்டுள்ளன.
இந்த 5 காரணங்களுக்காகவே ஜல்லி கற்கள் தண்டவாளத்தில் போடப்படுகின்றன.


No comments: