Breaking

ஆகஸ்ட்-25. யுரேனியம் உப்புக்களில் ஒளிர்வை (phosphorescence) ஆராயும் போது கதிரியக்கத்தைக் (Radioactivity) கண்டுபிடித்த பிரான்சிய இயற்பியலாளர்- அன்ட்டோன் ஹென்றி பெக்கெரல் (Antoine Henri Becquerel) மறைந்த தினம்.




இன்று நினைவு நாள்:- ஆகஸ்ட்-25.


யுரேனியம் உப்புக்களில் ஒளிர்வை (phosphorescence) ஆராயும் போது கதிரியக்கத்தைக் 
(Radioactivity)
கண்டுபிடித்த 
பிரான்சிய இயற்பியலாளர்-
அன்ட்டோன் ஹென்றி 
பெக்கெரல்
(Antoine Henri Becquerel) மறைந்த தினம்.

பிறப்பு:-

டிசம்பர்- 15, 1852 ஆம் ஆண்டு
பாரிசு, பிரான்சில்
பிறந்தார். பாரிஸில் உள்ள லயஸே லூயிஸ்-லே-கிராண்ட்
பள்ளியில் கல்வி கற்றார். அவர் எகோல் பாலிடெக்னிக் மற்றும் எகோல் டெஸ் பாண்ட்ஸ் எட் சௌஸ்ஸேஸ் ஆகிய கல்லூரியில் பொறியியல் பயின்றார். 


கண்டுபிடிப்புகள்:-

1896 இல் யுரேனியம் உப்புக்களில் ஒளிர்வை (phosphorescence) ஆராயும் போது தற்செயலாக கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தார். வில்லெம் ரோண்ட்கனின் கண்டுபிடிப்புகளை ஆராயும் ஒரு சோதனையில், இவர் ஒளிப்பாயப் பொருளான "பொட்டாசியம் யூரனைல் சல்பேட்டை" ஒளிப்படத் தட்டுக்களில் (photographic plates) வைத்து, தட்டுகளை கருப்புக்காகிதத்தினால் சுற்றி வைத்து சூரிய ஒளியை செலுத்தினார். ஆனாலும் பரிசோதனை தொடங்க முன்னரே புகைப்படத் தட்டுக்கள் முழுமையாகப் பாதிப்படைந்ததை (exposed) அவதானித்தார். 

யுரேனியமும் அதன் உப்புக்களும் கண்ணிற்குப் புலப்படாத கதிர்வீச்சுக்களை உமிழ்கின்றன என்றும் அவை காகிதம், மரம், கண்ணாடி போன்றவற்றின் வழியே ஊடுருவி ஒளித்தட்டைப் பாதிக்கின்றன என்றும் கண்டறிந்தார்.

பணிகள்:-


1892 ஆம் ஆண்டில் பாரிஸ் மியூசியத்தில் இயற்கையின் வரலாற்றில் விண்ணப்பித்த இயற்பியல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 

மூன்று வருடங்கள் கழித்து, அவர்  எகோல் பாலிடெக்னிக்கில் ஆசிரியராக பணிசெய்தார்.

1894 இல் மேம்பாலங்கள் மற்றும் பெருந்தெருக்கள் திணைக்களத்தில் பொறியியலாளராகவும் பணி செய்தார்.

விருதுகள்:-


ரம்ஃபோர்ட் விருது- (1900)

ஹெல்ம்ஹோல்ட்ஸ் விருது-(1901),

1903, மேரி கியூரி மற்றும் பியேர் கியூரி ஆகியோருடன் சேர்த்து இவருக்கு நோபல் பரிசுவழங்கப்பட்டது.

பார்னார்ட் விருது (1905)



மறைவு:-

அறிவியல் கழகத்தின் நிரந்தர செயலாளராக நியமிக்கப்பட்ட இவர்,
ஆகஸ்ட்-25, 1908 ஆம் ஆண்டு, தனது 55 வது வயதில் பிரான்சில் மரணமடைந்தார்.

 சிறப்புகள்:-

கதிரியக்கத்தின் 
SI அலகுக்கு இவரது நினைவாக பெக்கெரல் (Bq) எனப் பெயர் சூட்டப்பட்டது.

No comments:

Powered by Blogger.