ஆகஸ்ட் 30. J.J. தாம்சன் நினைவு நாள்
நினைவு தினம்...
ஜெ.ஜெ.தாம்சன்(Joseph John Thomson) என்று பொதுவாக அறியப்படுகின்ற ஜோசப் ஜான் தாம்சன் (டிசம்பர் 18, 1856 – ஆகஸ்ட் 30, 1940)
அணுவின் அடிப்படைப் பொருளான மின்னணு எனப்படும் எலக்ட்ரானைக் கண்டுபிடித்த ஆங்கில இயற்பியலார் ஆவார். இவர் மின்சாரவியல், காந்தவியல், ஐசோடோப்புகள் குறித்து ஆய்வுகள் செய்தவர். ‘நவீன அணு இயற்பியலின் தந்தை’ எனப் போற்றப்படுபவர். நிறை நிறமாலையைக் கண்டறிந்தவர். இயற்பியல் பேராசிரியராக விளங்கியது மட்டுமல்லாமல் தனது ஆய்வுகளுக்காக ‘ஆதம்சு பரிசு’ மற்றும் 1906 -ல் இயற்பியலுக்கான நோபல் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர். எந்த ஒரு பொருளும் மின்னணுக்களைக் கொண்டுள்ளது என்பதை நிரூபித்தவரும் அவரே. கேதோட் கதிர்களின் (Cathode Rays) உள்கட்டமைப்பைப் பற்றிய சிக்கலான வினாவிற்கு விடை காண அறிவியல் அறிஞர்கள் முயற்சி செய்துகொண்டு இருந்தபோது இக்கண்டுபிடிப்பு நிகழ்ந்தது.
தாம்சன் முதன்முதலில் அணுவைப் பற்றி ஆராய்ச்சி செய்து ” நீர்ச்சுழி வளையங்களின் இயக்கத்தில் ஆய்வு” (Treatise on the motion of Vortex Rings) என்ற ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டார். அது 1884-ல் ஆதம்சு பரிசை இவருக்குப் பெற்றுத் தந்தது.


No comments: