எலுமிச்சை பழத்துடன் இதை சேர்த்து சாப்பிட்டால் நோய் பறந்து போகும்.!
நமக்கு ஏற்படும் உடல் நல பிரச்சனைகளை சரிசெய்வதற்கு இயற்கை நமக்கு பெரிய வரனை தனது உள்ளது. எந்த விதமான பெரும் செலவில்லாமல், குறைந்த அளவிலான செலவு செய்து நமது உடலை நாமே பாதுகாத்துக்கொள்ளலாம்.
மேலும் சில நோய்களுக்கு எந்த விதமான செலவும் இல்லாமல் வைத்தியம் செய்து கொள்ளலாம். அந்த வகையில், இயற்கையாக கிடைக்கும் எலுமிச்சை பழம் மற்றும் மிளகுடன் உப்பை சேர்த்து சாப்பிட்டால் நமது உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இனி காண்போம்.
எலுமிச்சை சாறுடன் மிளகு சேர்த்து இதமான சூடுள்ள நீருடன் உப்பு சேர்த்து பருகினால் வயிற்று கோளாறுகள் உடனடியாக நீங்கும்.
அடிக்கடி ஏற்படும் பல் வலியை மீண்டும் வரவிடாமல் செய்வதற்கு அரை தே.கரண்டி கிராம்பு எண்ணெய்யுடன் சிறிதளவு மிளகு பொடியை சேர்த்து கலந்து பற்களின் மீது தேய்த்தால் பற்களில் இருக்கும் ஈறுகளின் வீக்கம் கட்டுக்குள் வரும். இதுமட்டுமல்லாது மூக்கில் இருந்து இரத்தம் வடியும் பிரச்சனை மற்றும் மூக்கடைப்பு பிரச்சனை உடனடியாக குணப்படுத்தப்படுகிறது.


No comments: