செப்டம்பர்-22. அனைத்து நாடுகளிலும் சம பகல், இரவு நாள்.. (Equinox)
04:26
Read
இன்று வானியல் நிகழ்வு:- செப்டம்பர்-22.
அனைத்து நாடுகளிலும் சம பகல், இரவு நாள்..
(Equinox)
பிரபஞ்சத்தில் சூரியன்தான் எல்லாவற்றையும் இயக்குகிறது. பூமிப் பந்து ஒரு பக்கமாக, அதாவது 23.45° டிகிரி சாய்ந்த அச்சில் சூரியனைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அதனால் பூமியின் ஒரு பகுதியில் அதிகச் சூரிய ஒளி படும், மறுபுறம் குறைவாகப் படும்.
சூரிய ஒளி படுவதைப் பொறுத்துப் பகலும் இரவும் நீண்டும், குறுகியும் அமைகின்றன.
இருந்தாலும் வருடத்துக்கு இரண்டு முறை மட்டும் இரவும் பகலும் கிட்டத்தட்ட சமமான அளவுக்கு இருக்கும்.
அதில் ஒரு நாள் செப்டம்பர் 22/23.
மற்றொன்று மார்ச் 20.
ஆண்டுதோறும் நடக்கும் முக்கிய வானியல் நிகழ்வுகளில் இவையும் ஒன்று. இந்த நாட்கள் சம இரவுபகல் நாள் (Equinox) எனப்படுகின்றன.
இந்த இரண்டு நாட்களில் மட்டுமே உலகிலுள்ள அனைத்து நாடுகளிலும் இரவும் பகலும் ஒரே அளவுக்கு இருக்கும்.
செப்டம்பர் 22/23க்குப் பிறகு இந்தியாவில் பகல் நேரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துகொண்டே வரும்.
சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 1,07,826 கி.மீ. வேகத்தில் சூரியனை பூமி சுற்றுகிறது.
சூரிய ஒளி சூரியனில் இருந்து புறப்பட்டு பூமியை வந்தடைய 8 நிமிடம் 20 விநாடி எடுத்துக்கொள்கிறது.
ஆங்கிலத்தில் equinox என்ற சொல், equinoxium என்ற லத்தீன் சொல்லில் இருந்து உருவானது. இதற்கு பகலும் இரவும் சமம் என்று அர்த்தம்.
கிரேக்க நம்பிக்கைபடி, முந்தைய மாதங்களின் வெற்றி, தோல்விகளை திரும்பிப் பார்ப்பதற்கான நாள்தான் சம இரவுபகல் நாள்.
ஆஸ்திரேலியாவில் உள்ள பழங்குடிகளுக்கு செப்டம்பர் மாத சம இரவுபகல் நாள் மிகவும் முக்கியமானது. ஏனென்றால், அதற்குப் பிறகுதான் ஆஸ்திரேலியாவில் வசந்த காலம் தொடங்கும்.
சீனாவில் இலையுதிர் காலத்துக்கு இடையில் வரும் சம இரவுபகல் நாள் நிலா விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அப்போது, கோடை கால அறுவடையைக் கொண்டாடும் வகையில் தாமரை, எள், முட்டை, உலர்பழங்கள் சேர்க்கப்பட்ட மூன்கேக் செய்வது வழக்கம்.
செப்டம்பர்-22. அனைத்து நாடுகளிலும் சம பகல், இரவு நாள்.. (Equinox)
Reviewed by JAYASEELAN.K
on
04:26
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
04:26
Rating: 5
Tags :
Special Day


No comments: