Breaking

செப்டம்பர்-27. சோதனைக் குழாய்க் குழந்தை (reproductive medicine in-vitro fertilization) பிறப்பு முறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான பிரிட்டன் உயிரியலாளர்- ராபர்ட் ஜெப்ரி எட்வர்ட்சு (Robert Geoffrey Edwards) பிறந்த தினம்.


இன்று பிறந்த நாள் செப்டம்பர்-27.

சோதனைக் குழாய்க் குழந்தை
(reproductive medicine
in-vitro fertilization)
 பிறப்பு முறையைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான பிரிட்டன் உயிரியலாளர்-
ராபர்ட் ஜெப்ரி எட்வர்ட்சு (Robert Geoffrey Edwards) பிறந்த தினம்.

பிறப்பு:-

செப்டம்பர்-27, 1925 ஆம் ஆண்டு
மான்செஸ்டரில் பிறந்தார். பிறகு
வேல்சு பல்கலைக்கழகம்,
எடின்பரோ பல்கலைக்கழகம் போன்றவற்றில் கல்வி கற்றார்.


முதல் சோதனைக் குழாய்க் குழந்தை:-

ராபர்ட் எட்வர்ட்சு 1960 களிலிருந்தே செயற்கைக் கருத்தரிப்பு முறையைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் ஈடுபட்டார். பல முயற்சிகளுக்குப் பின் செயற்கைக் கருத்தரிப்பு வழியாக லூயிசு பிரவுன் என்று பெயரிடப்பட்ட பெண்குழந்தை ஜுலை 25, 1978 இல் லெஸ்லி பிரவுன் என்னும் இங்கிலாந்துப் பெண்ணுக்குப் பிறந்தது.
அந்த முதல் குழந்தையின் பிறப்பைத் தொடர்ந்து, கடந்த 35 ஆண்டுகளில் உலகம் முழுவதிலும் சுமார் 5 மில்லியன் குழந்தைகள் செயற்கை முறைச் சோதனைக் குழாய் கருத்தரிப்பின் மூலம் பிறந்துள்ளார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ராபர்ட் எட்வர்ட்சும் பேட்ரிக் ஸ்டெப்டோவும் கண்டுபிடித்த குழந்தைக் கருத்தரிப்பு முறை உலகில் சிறந்த வரவேற்பைப் பெற்றது.



விருதுகள்:-

மருத்துவத்துக்கான நோபல் பரிசு (2010)

மறைவு:-

ஏப்ரல்-10, 2013 ஆம் ஆண்டு
இங்கிலாந்தில் மரணம் அடைந்தார்.

No comments:

Powered by Blogger.