Breaking

அக்டோபர் -23. ஐபாட் அறிமுகம் ஆன தினம் (2001).


இன்று சிறப்பு நாள்:-
அக்டோபர் -23.

ஐபாட் அறிமுகம் ஆன தினம் (2001).


ஐபாட்-iPod.
 என்பது ஆப்பிள் நிறுவனம் உருவாக்கிய கையடக்க இசைகேளி (music player) ஆகும்.

இக்கருவியை 
அக்டோபர்- 23, 2001ல் ஸ்டீவ் ஜாப்ஸ் அறிமுகப்படுத்தினார். 

2008 இல் அசையாநினைவகம் (flash) மற்றும் வன்நினைவகம் (hard disk) கொண்டு பாடல்களைப் பதிவு செய்யும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் வெளியான "ஐபோட் டச்", தொடு திரை வசதி பெற்றுள்ளது. 

ஐப்பாடுகளை யு.எஸ்.பி பெருங்கிடங்காகவும் (USB Mass Storage Device) பயன்படுத்த முடியும். அதன் கொள்ளளவு வெவ்வேறு வகைகளுக்கு தகுந்தாற்போல் அமைந்துள்ளது. 

ஐ-டியூன்ஸ் (iTunes) மென்பொருள் மூலம் பாடல்கள், படங்களைப் பதியலாம். இந்த ஐட்டியூன்ஸ் மென்பொருளை ஆப்பிள் இணையத்தளத்தில் இருந்து இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும்.

ஐபாட் கிளாசிக் மாடல்கள் உட்புற கடின வட்டில் மீடியாவை சேமிக்கின்றன, மற்ற மாடல்கள் அனைத்தும் சிறிய அளவில் அவற்றை சேமிக்க ஃபிளாஷ் நினைவகத்தைப் பயன்படுத்துகின்றன மற்ற டிஜிட்டல் மியூசிக் பிளேயர்களோடு ஒப்பிடுகையில் ஐபாடுகள் வெளிப்புற தகவல் சேமிப்பு சாதனங்களாகவும் செயல்படுகின்றன. சேமிப்பு திறன் மாடல்களுக்கு ஏற்ப மாறுபடுகின்றன.

வரலாறு:-

இக்கருவியை ஜொனத்தன் ஐவ் ஓராண்டு காலத்தில் உருவாக்கினார். இவர் தான் ஐப்போன் தயாரிக்கவும் காரணமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்பிள் மகின்தோஷ் மற்றும் மைக்ரோசாப்ட் விண்டோஸ் ஆபரேட்டிங் சிஸ்டம்களின் குறிப்பிட்ட பதிப்புக்களைப் பயன்படுத்தி கம்ப்யூட்டர்களிலிருந்து சாதனங்களுக்கு இசையை மாற்றிக்கொள்ள ஆப்பிளின் ஐடியூன்ஸ் சாப்ட்வேரைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஆப்பிள் சாப்ட்வேரைப் பயன்படுத்தாத பயனர்களுக்கு அல்லது ஐடியூன்ஸ் மென்பொருள் செயல்படாதவர்களின் கம்ப்யூட்டர்களுக்கு ஐடியூன்களுக்கான சில ஓபன் சோர்ஸ் மாற்றுக்களும் கிடைக்கின்றன.

ஐடியூன்களும் அதன் மாற்றுக்களும் புகைப்படங்கள், வீடியோக்கள், விளையாட்டுக்கள், தொடர்புத் தகவல்கள், மின்னஞ்சல் அமைப்புக்கள், வலைத்தள புக்மார்க்குகள் மற்றும் காலண்டர்களை மாற்றச்செய்யும் அம்சங்களை ஏற்கின்ற ஐபாட் மாடல்களிலும் செயல்படலாம். 

2009 செப்டம்பர் 9 வரை உலகம் 220,000,000 ஐபாடுகள் விற்பனை செய்யப்பட்டு வரலாற்றிலேயே சிறந்த விற்பனையான டிஜிட்டல் ஆடியோ பிளேயர் என்ற பெயரைப் பெற்றது.

No comments:

Powered by Blogger.