அக்டோபர்:-30. சுவிஸ் நாட்டை சார்ந்த, செஞ்சிலுவைச் சங்கத்தைத் தொடங்கியவர், முதல் அமைதிக்கான முதல் நோபல் பரிசை பிரடெரிக் பாசியுடன் பகிர்ந்து கொண்டவர்-ஜீன் ஹென்றி டுநன் (Jean Henri Dunant) மறைந்த தினம்.
இன்று நினைவு நாள் அக்டோபர்:-30.
சுவிஸ் நாட்டை சார்ந்த,
செஞ்சிலுவைச் சங்கத்தைத் தொடங்கியவர், முதல் அமைதிக்கான முதல் நோபல் பரிசை பிரடெரிக் பாசியுடன் பகிர்ந்து கொண்டவர்-ஜீன் ஹென்றி டுநன் (Jean Henri Dunant) மறைந்த தினம்.
பிறப்பு:-
மே-08, 1828 ஆம் ஆண்டு,
ஜெனீவாவில் பிறந்தார்.
செஞ்சிலுவைச் சங்கம் தோற்றம்:-
1859 இல் இத்தாலி நாட்டில் உள்ள சால்ஃபரீனோ என்ற நகருக்குச் சென்றார். அங்கே நடந்த போரில்
40,000 பேருக்கும் மேல் காயங்களால் பாதிக்கப்பட்டு இருந்தார்கள். அங்கே
அவர்களுக்கு மருத்துவ உதவி மற்றும் உணவு கிடைக்காமல் அவதிப் பட்டார்கள்.
இதைப்பார்த்து பார்த்து மனம் வருந்திய ஹென்றி, அந்தப் பகுதியில் வாழ்ந்தவர்களைத் விளக்கம் அளித்து ஒன்றுதிரட்டி காயமுற்ற போர்வீரர்களுக்கு மூன்று நாட்கள் முதல் உதவி செய்தார்.பிறகு தன் சொந்த ஊரான ஜெனீவாவுக்குத் திரும்பிய பிறகும் கூட, அந்தப் பாதிப்புகள் இவரது மனதை விட்டு நீங்கவில்லை. எனவே அதன் நினைவாக, சால்ஃபரீனோ நினைவுகள் என்ற புத்தகத்தை எழுதினார். இந்தூலில் ‘போரில் காயமுறுவர்களுக்கு உதவுவதற்காக எந்தச் சார்பும் இல்லாத ஒரு பன்னாட்டு அமைப்பை உருவாக்க வேண்டும் என்று தன் கருத்தைத் தெரிவித்திருந்தார்.
புத்தகம் வெளியாகி ஓராண்டுக்குப் பிறகு ஹென்றியின் எண்ணம் நிறைவேறும் வாய்ப்பு ஏற்பட்டது.
ஜெனீவா மக்கள் நல அமைப்பின் தலைவராக இருந்த குஸ்தவ் மாய்னீர் என்பவருக்கு ஹென்றியின் இந்தக் கருத்துப் பிடித்துப்போனது.
போரில் காயப்படுகிறவர்களுக்கு உதவும் நோக்கில் பல்வேறு பரிந்துரைகளை அவர் முன்வைத்தார்.
இந்தப் பரிந்துரைகள் 16 நாடுகளைச் சேர்ந்த உறுப்பினர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதன்படி உருவானதுதான் செஞ்சிலுவைச் சங்கம்.
1864 ஆம் ஆண்டு ஸ்விஸ் நாட்டு நாடாளுமன்ற ஏற்பாட்டில் நடைபெற்ற ஜெனீவா மாநாட்டில் இந்த அமைப்பை உருவாக்க அதிகாரபூர்வமாக 12 நாடுகள் ஒப்புக்கொண்டன.
அடுத்து வந்த ஆண்டுகளில் அடுத்தடுத்து பல்வேறு நாடுகள் இந்தச் சங்கத்தில் இணைந்தன.
விருதுகள்:-
1901-ஆம் ஆண்டு முதல் அமைதிக்கான நோபல் பரிசை பகிர்ந்துகொண்டார்.
மறைவு:-
அக்டோபர்-30, 1910 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
இவருடைய பிறந்தநாளான மே-08 அன்று, செஞ்சிலுவை தினம் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கது ஆகும்.


No comments: