நவம்பர்-02. நவீன கணிதவியல் வல்லுநரும் அல்ஜீப்ரா பிதா மகன்-ஜார்ஜ் பூல் (George Boole) பிறந்த தினம்.
இன்று பிறந்தநாள்:- நவம்பர்-02.
நவீன கணிதவியல் வல்லுநரும் அல்ஜீப்ரா பிதா மகன்-ஜார்ஜ் பூல் (George Boole)
பிறந்த தினம்.
பிறப்பு:-
இங்கிலாந்தில் நவம்பர்-02, 1815 ஆம் ஆண்டு பிறந்தார். பள்ளிப் படிப்பின்போதே அறிவாற்றலுடன் விளங்கிய குழந்தை மேதை இவர். 12 வயதில் லத்தீன் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். ஜெர்மன், பிரெஞ்சு, கிரேக்க மொழிகளை சிறு பருவத்திலேயே கற்றுத் தேர்ந்தார்.
தந்தை நடத்திய காலணித் தொழில் நொடித்ததால் 16 வயதில் குடும்பப் பொறுப்பை ஏற்றார். பள்ளியில் உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 20 வயதில் சொந்தமாக ஒரு பள்ளியை நிறுவினார். கணிதம் மீதான ஆர்வத்தால், ஆராய்ச்சிப் புத்தகங்களைத் தேடித் தேடிப் படித்தார். லிங்கன்ஸ் மெக்கானிக்ஸ் இன்ஸ்டிடியூட்டில் ஐசக் நியூட்டனின் புத்தகங்களைப் படித்து அல்ஜீப்ராவில் உயர்நிலை கணக்குகளுக்குத் தீர்வு காணத் தொடங்கினார்.
1838-ல் தொடங்கி கணிதத் துறை வல்லுநர்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டார்.
கட்டுரைகள்:-
பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதினார்.
நுண்கணிதம், இயற்கணிதம், வகையீட்டு சமன்பாடுகள் ஆகியவற்றில் ஆராய்ச்சி மேற்கொண்டு புதிய கோட்பாடுகளை வகுத்தார். 50-க்கும் மேலான அவரது ஆய்வுக் கட்டுரைகள் மிகவும் பிரபலமாயின.
கேம்பிரிட்ஜ் கணித இதழில் ‘அனலிடிகல் டிரான்ஸ்பர்மேஷன் தியரி’ குறித்த தொடர் கட்டுரைகளை 24-வது வயதில் எழுதினார். தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேலாக இவர் எழுதிய கட்டுரைகள் கணிதத் துறையின் புதிர்களை எளிமையாக புரியவைத்தன.
விருதுகள்:-
அயர்லாந்தின் க்வீன்ஸ் கல்லூரியில் கணிதத் துறையின் முதல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.
டப்ளின், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவப் பட்டங்கள் வழங்கின.
ராயல் சொசைட்டியின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கண்டுபிடிப்புகள்:-
1884-ம் ஆண்டு பிலாஸபிகல் டிரான்ஸாக் ஷன் ஆப் தி ராயல் சொசைட்டி என்ற ஆய்வுக் கட்டுரைக்காக ராயல் சொசைட்டியின் தங்கப் பதக்கம் பெற்றார். அதில்தான் அல்ஜீப்ரா - கால்குலஸ் இணைப்பு குறித்து விளக்கியிருந்தார்.
தற்போது பூலன் அல்ஜீப்ரா எனப்படும் லாஜிக்கல் அல்ஜீப்ரா குறித்த ஆராய்ச்சியையும் தொடங்கினார்.
இன்றைய டிஜிட்டல் கம்ப்யூட்டர் சர்க்யூட்களுக்கு அடிப்படை வடிவமைப்பு இவர் உருவாக்கிய பூலன் அல்ஜீப்ரா. அதனாலேயே அல்ஜீப்ராவின் பிதாமகர் என்று அழைக்கப்படுகிறார்.
மறைவு:-
கணித மேதையும் தத்துவவாதியுமான ஜார்ஜ், கணினி அறிவியல் துறை தோன்றக் காரணமானவர்களில் ஒருவராகக் கருதப்பட்ட இவர், டிசம்பர்-08, 1869 ஆம் ஆண்டு, தனது 49-வது வயதில் உடல்நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
No comments: