Breaking

நவம்பர்-20. தெ சிட்டர் புடவி, தெ சிட்டர் வெளி கருத்து படிமங்களை வெளியிட்ட டச்சு கணிதவியலாளர்- வில்லெம் தெ சிட்டர் (Willem de Sitter) மறைந்த தினம்.

இன்று நினைவு நாள்:- நவம்பர்-20.

தெ சிட்டர் புடவி, தெ சிட்டர் வெளி கருத்து படிமங்களை வெளியிட்ட டச்சு கணிதவியலாளர்-
வில்லெம் தெ சிட்டர் (Willem de Sitter) மறைந்த தினம்.

பிறப்பு:-

மே-06, 1872 ஆம் ஆண்டு,
சுனீக், டச்சில்
பிறந்தார். கணிதவியலைக் குரோனிங்கன் பல்கலைக்கழகத்தில் பயின்றார். 

பணிகள்:-

குரோனிங்கன் வானியல் ஆய்வகத்தில் பணியில் சேர்ந்தார். பிறகு தென்னாப்பிரிக்கா, நன்னம்பிக்கை முனையில் உள்ள அரசு வான்காணகத்தில் 1897 முதல் 1899 வரை பணிபுரிந்தார். பின்னர், 1908 இல் இவர் இலெய்டன் பல்கலைக்கழக வானியல் ஆய்வகத்தில் பணியமர்த்தப்பட்டார். இவர் 1919 இல் இருந்து தனது இறப்பு வரை இலெய்டன் பல்கலைக்கழக இயக்குநராக பதவி வகித்தார்.

ஆய்வுகள்:-

இவர் அண்டப் புறநிலைக் கட்டமைப்புப் புலத்தில் விரிவான ஆய்வு செய்துள்ளார். ஆல்பர்ட் ஐன்சுட்டைனுடன் இணைந்து  1932 இல் ஓர் ஆய்வுரை வெளியிட்டார். இதில் இருவரும் புடவி வளைமைக்கான அண்டத் தரவுகளின் விளைவுகள் பற்றி விவாதித்துள்ளனர். இவர் தே சிட்டர் வெளி, 
தெ சிட்டர் புடவி ஆகிய கருத்துப் படிமங்களை விவரித்துள்ளார். இது ஐன்சுட்டைனின் பொது சார்பியலுக்கான ஒரு தீர்வாகும். இதில் பொருண்மமோ நேரியல் அண்ட மாறிலியோ அமையவில்லை. இது இயல் வளர்ச்சிப் போக்கில் தொடர்ந்து விரிவுறும் வெற்றுப் புடவி ஆகும். இவர் வியாழன்கோள் பற்றிய ஆய்வுக்கும் புகழ்பெற்றவர் ஆவார்.

பதவிகள்:-

1912 இல் நெதர்லாந்து அரசு கலை, அறிவியல் கல்விக்கழகத்தின் உறுப்பினர் ஆனார்.

வெளியீடுகள்:-

On the bearing of the Principle of Relativity on Gravitational Astronomy, 1911, Monthly Notices of the Royal Astronomical Society, Vol. 71, p. 388–415



விருதுகள்:-

ஜேம்சு கிரெய்கு வாட்சன் பதக்கம்- (1929),

புரூசு பதக்கம் -(1931),

அரசு வானியல் கழகப் பொற்பதக்கம்- (1931),


இறப்பு:-

இவர், சிறந்த இயற்பியலாளரும், வானியலாளருமாக சிறப்பான பங்களிப்பை வழங்கிய இவர்,
நவம்பர்-20, 1934 ஆம் ஆண்டு,
லைடனில் மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

இவரது பெயரில்
நிலாக் குழிப்பள்ளம் தெ சிட்டர்,
குறுங்கோள் 1686 தெ சிட்டர் என்று வழங்கப்படுகிறது.

No comments:

Powered by Blogger.