Breaking

நவம்பர்-22. அக-கூட்டுவாழ்வு (endo-symbiosis) கண்டுபிடித்த பெண் பரிணாம அறிவியலாளரும், பேராசிரியரும்- லின் மர்குலிஸ் (Lynn Margulis) மறைந்த தினம்.


இன்று நினைவு நாள்:- நவம்பர்-22.

அக-கூட்டுவாழ்வு (endo-symbiosis) கண்டுபிடித்த பெண்
பரிணாம அறிவியலாளரும், பேராசிரியரும்-
லின் மர்குலிஸ் (Lynn Margulis) மறைந்த தினம்.

பிறப்பு:-

அமெரிக்காவின் இல்லினாய்ஸ்,
சிகாகோவில் மார்ச்-05, 1938 ஆம் ஆண்டு
பிறந்தார். 1952 இல்
ஹைடே பார்க் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். 1957 இல் சிகாகோ பல்கலைக்கழகத்தில் BA பட்டம் பெற்றார். 

விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் விலங்கியல், மரபியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். பெர்கேலி கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1965 இல் மரபணுக்கள் குறித்து ஆராய்ந்து முனைவர் பட்டம் பெற்றார்.

பணிகள்:-

1967 இல் உதவி பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 1971 இல் இணை பேராசிரியராகவும், 1977 ல் முழு பேராசிரியராகவும், 1986 ல் பல்கலைக்கழக பேராசிரியருக்காகவும் பதவி உயர்வு பெற்றார். 1993 ஆம் ஆண்டில் உயிரியல் நிபுணத்துவ பேராசிரியராக பணிபுரிந்தார்.

ஆராய்ச்சிகள்:-

இவருடைய முக்கியமான அறிவியல் பங்களிப்பு உயிரணுக்களுக்குள் இருக்கும் சில நுண் அமைப்புகள் (இழைமணி
போன்றவை) எப்படிப் பரிணாமத்தில் உருவாகியிருக்கும் என்பது ஆகும். இவை மெய்க்கருவுயிரி உயிர்களின் அணுக்களுள் கூட்டாக இணைந்து வாழும் நிலைக்
கருவிலி நுண்ணுயிரிகளாக தொடங்கி பின் செல்களின் உள் உறுப்பு அமைப்புகளாக மாறியிருக்கும் என இவர் கண்டறிந்தார். இது எண்டோ-சிம் பயோசிஸ் (endo-symbiosis) என அறியப்படுகிறது. இதுவே மைட்டோகாண்ட்ரியா, க்ளோரோப்ப்லாஸ்ட் போன்ற அமைப்புகள் குறித்த ஏற்கப்பட்ட அறிவியல் பார்வையாக இன்று உள்ளது.

செல் மரபணுக்கள் குறித்த ஆராய்ச்சியில் பல ஆண்டு காலம் ஈடுபட்டார்.
செல்களின் உட்பகுதி கட்டமைப்புகள் குறித்து மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்டார்.1980களில் செல்லில் உள்ள நியூக்ளியர் டி.என்.ஏயும் இழைமணி, பசுங்கனிகம் ஆகியவற்றில் உள்ள டி.என்.ஏவும் வேறுபட்டிருப்பது  கருதுகோளுக்கு சிறப்பாக வலு சேர்த்தது. 
கையா (Gaia) என்ற கருதுகோளை பிரிட்டன் விஞ்ஞானி ஜேம்ஸ் லவ்லாக்குடன் இணைந்து உருவாக்கினார். 

நிலவியல், புவி உருவாக்கம், அதன் செயல்பாடு, நுண்உயிரிகளின் பங்கு குறித்தும் பல கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்.

பூமியில் வாழும் உயிரினங்களை விலங்குகள், தாவரங்கள், பாக்டீரியா, பூஞ்சை, புரோட்டாஸோவா என்ற ஐந்தாகப் பிரிக்கும் வழிமுறை குறித்த ‘ஃபைவ் கிங்டம்ஸ்’ என்ற இவரது நூல் இயற்றினார்.

நூல்கள்:-

இவர் தனது கருத்துகளை 1970-ல் ‘ஆரிஜின் ஆஃப் யூகார்யோடிக் செல்ஸ்’ என்ற நூலில் எழுதியுள்ளார். 

சிம்போசிஸ் இன் செல் எவால்யூயேஷன் என்ற 2-வது நூல் வெளிவந்தது. 
‘லுமினியஸ் ஃபிஷ்’  சிறுகதைத் தொகுப்பையும் எழுதி வெளியிட்டார். 

விருதுகள்:-

நேஷனல் மெடல் ஆஃப் சயின்ஸ் (1999),
விஞ்ஞான சாதனைக்கான வில்லியம் ப்ரெக்டர் பரிசு (1999),
50 ஆண்டுகளுக்கு ஒருமுறை வழங்கப்படும்
டார்வின்-வாலஸ் பதக்கம் (2008),
அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2010, ஆஸ்ட்ரோபயாலஜி  நாசா பொது சேவை விருது வழங்கப்பட்டது.

மறைவு:-

நவீன உயிரியலில் சிறந்த சிந்தனையாளர், தத்துவார்த்த உயிரியல் விஞ்ஞானியான இவர், நவம்பர்-22, 2011 ஆம் ஆண்டு
அமரெஸ்ட், மாசசூசெட்ஸ், அமெரிக்காவில்
 மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

15 பல்கலைக்கழகங்களிலிருந்து கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார்.

No comments:

Powered by Blogger.