Breaking

நவம்பர்-22. KGF பரிசோதனைகள்- கோலார் கோல்ட் சுரங்கத்தில் ஆழமான பகுதியில் காஸ் மிக் கதிர்களைச் செலுத்தி, அதன்மூலம் வெளியான நியூட்ரினோக்களை ஆராய்ந்தவர், மியான் நுண்துகள் கண்டறிந்தவர்- எம்.கோவிந்த் குமார் மேனன், (Mambillikalathil Govind Kumar Menon) மறைந்த தினம்.


இன்று நினைவு நாள்:- நவம்பர்-22.

KGF பரிசோதனைகள்-
கோலார் கோல்ட் சுரங்கத்தில் ஆழமான பகுதியில் காஸ் மிக் கதிர்களைச் செலுத்தி, அதன்மூலம் வெளியான நியூட்ரினோக்களை ஆராய்ந்தவர், மியான் நுண்துகள் கண்டறிந்தவர்-
எம்.கோவிந்த் குமார் மேனன்,
(Mambillikalathil Govind Kumar Menon) மறைந்த தினம்.

பிறப்பு:-

கர்நாடக மாநிலம் மங்களூரில் ஆகஸ்ட்-28, 1928 ஆம் ஆண்டு பிறந்தார். கர்னூல், கடலூரில் ஆரம்பக்கல்வி பயின்றார். ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் 1942 இல் மெட்ரிக் தேர்ச்சிபெற்றார். 
ஆக்ரா பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் பட்டம் பெற்றார். மும்பை ராயல் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் முதுநிலை பட்டம் பெற்றார். காஸ்மிக் கதிர்கள் பற்றி ஆய்வு செய்து, இங்கிலாந்தின் பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் (Ph. D) முனைவர் பட்டம் பெற்றார்.

பணிகள்:-

கொல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் பணியாற்றினார். 

டாடா ஆராய்ச்சி நிறுவனம் தொடங்கப்பட்டபோது ஹோமி பாபாவின் அழைப்பை ஏற்று அதில் இணைந்தார்.

ஆராய்ச்சிகள்:-

விண்வெளிக்கு கருவிகளைக் கொண்டு சேர்க்கும் பிளாஸ்டிக் பலூன்களைத் தயாரிக்கும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இது விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னோடி ஆய்வுத் திட்டமாக கருதப்பட்டது.

மேலும் இவரது காஸ்மிக் கதிர்கள், துகள் பற்றிய ஆராய்ச்சிகள் இயற்பியல் துறையில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பூமிக்கு அடியில் மிக ஆழமான பகுதியில் காஸ்மிக் கதிர்கள் எவ்வாறு இயங்குகின்றன என்ற ஆய்வில் ஈடுபட்டார். 
கோலார் தங்கச் சுரங்கத்தில் ஆழமான பகுதியில் அக்கதிர்களைச் செலுத்தி, அதன்மூலம் வெளியான நியூட்ரினோக்களை ஆராய்ந்தார்.
மேலும் டாடா ஆராய்ச்சி நிறுவனத்தில் 
அறிவியல், வானொலி விண்ணியல், திடநிலை மின்னணுவியல், புவி இயற்பியல் ஆகிய துறைகளில் மிக சிறந்த பங்களிப்புகளை வழங்கினார்.
மேலும், நியூட்ரினோ தொடர்பான ஆராய்ச்சியில் பல முக்கிய முடிவுகளை இவரது குழு கண்டறிந்தது. அண்டக்கதிர்கள் மோதும்போது, உருவாகும் ‘மியான்’ என்ற புதிய நுண்துகள் கண்டறியப்பட்டது. இது தொடர்பான தகவல்கள் சர்வதேச அண்டக்கதிர் ஆராய்ச்சி மாநாட்டில் ஆய்வறிக்கை சமர்ப்பித்தார். 

பதவிகள்:-

1972 ஆம் ஆண்டில் ISRO தலைவராக இருந்தார்.

1982-1989 வரை திட்டக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

1986-1989 வரை
பிரதமரின் அறிவியல் ஆலோசகராக இருந்தார்.

1990-96 ஆண்டுகளில் பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 

 
விருதுகள்:-

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்திற்கான சாந்தி ஸ்வரூப் பட்நாகர் பரிசு-1960), 
பத்மபூஷன் விருது-1968,
ராயல் சொசைட்டி ஃபெல்லோ (FRS) -1970,
பத்ம விபூஷன் விருது-1985,
அப்துஸ் சலாம் மெடல்-1996, போன்ற விருதுகளை பெற்றார்.
 
இறப்பு:-

அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கல்வித்துறை அமைச்சராகவும்,
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சியில் சிறப்பாகவும் செயல்பட்ட இவர்,நவம்பர்-22, 2016 ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

2008 இல் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளுக்கு ‘7564 கோகுமேனன்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

No comments:

Powered by Blogger.