Breaking

நவம்பர்-25. கசொலின் (gasolin) எனப்படும் பெட்ரோல் எந்திரத்தைக் கண்டு பிடித்த ஜெர்மனி மோட்டார் இயந்திரவியலாளர்- கார்ல் பிரீட்ரிச் பென்ஸ் பிறந்த தினம்.


இன்று பிறந்த நாள்:- நவம்பர்-25.

கசொலின் (gasolin) எனப்படும் பெட்ரோல் எந்திரத்தைக் கண்டு பிடித்த ஜெர்மனி  மோட்டார் இயந்திரவியலாளர்-
கார்ல் பிரீட்ரிச் பென்ஸ் பிறந்த தினம்.

பிறப்பு:-

ஜோசெபின் வைல்லன்ட், ஜோஹன் ஜார்ஜ் பென்ஸ் தம்பதிக்கு நவம்பர்-25, 1844 ஆம் ஆண்டு  பிறந்தார். 

15 வது வயதில் இயந்திர பொறியியல் நுழைவுத் தேர்வில் தேறி 19 ஆம் வயதில் பட்டதாரி ஆனார்.

பணிகள்:-

பட்டம் பெற்றதும் பல நிறுவனங்களில் இவர் வேலை செய்தார். அப்போது எல்லாம் இவரது கவனம் மிதிவண்டியையும் குதிரை வண்டியையும் எப்படி ஆள் பலம் இல்லாமல் இயக்குவது என்று சிந்தித்தார்.  மேலும் பாலம் கட்டுமானம், இரும்பு சார்ந்த தொழிற்சாலைகள் போன்றவற்றில் வேலை செய்தார்.

கண்டுபிடிப்புகள்:-


1871 ஆம் ஆண்டில் தனக்கு 27 வயதாகும் போது ஆகசுடு இரிட்டர் என்பவரோடு இணைந்து இரும்பாலை மற்றும் இயந்திரவியல் பட்டறையை மென்கெய்மில் உருவாக்கினார்.

முதலில் இரு அடிப்பு இயந்திரத்தை (two stroke engine) வடிவமைத்து 1879 ல் காப்புரிமம் பெற்றார். பின்னர் வேக நிர்ணயத் தொகுதி, மின்கலம் மூலம் தீப்பொறியை உண்டாக்கும் கருவி (spark plug), எரிபொருள் வளிக்கலப்பி (carburetor), விடுபற்றி(clutch) , மோட்டார் வண்டி கியர்(gear shift), மோட்டார் வண்டியில் நீர் மூலம் குளிர்ச்சி உண்டாக்கும் சாதனம்(water radiator) போன்றவற்றிற்கு காப்புரிமம் பெற்றார். 1883 ல் மார்க்ஸ் ரோஸ் மற்றும் பிரீட்ரிச் வில்ஹெல்ம் எஸ்லிங்கேர் உடன் பென்ஸ் பென்சு அன்டு கம்பனி ரெய்னிசி காஸ்மோட்டாரென் ஃபேப்ரிக்கு (Benz & Company Rheinische Gasmotoren-Fabrik) எனும் பென்சு அன்டு சி (Benz & Cie) என அறியப்பட்ட நிறுவனத்தைத் தொடக்கினார்.
1883 ல் மார்க்ஸ் ரோஸ் மற்றும் பிரீட்ரிச் வில்ஹெல்ம் எஸ்லிங்கேர் உடன் பென்ஸ் பென்சு அன்டு கம்பனி ரெய்னிசி காஸ்மோட்டாரென் ஃபேப்ரிக்கு (Benz & Company Rheinische Gasmotoren-Fabrik) எனும் பென்சு அன்டு சி (Benz & Cie) என அறியப்பட்ட நிறுவனத்தைத் தொடக்கினார்.
இதன் வெற்றி நான்கடிப்பு இயந்திரத்தைக் கொண்ட நவீன உத்திகளுடன் கூடிய வாகனம் 1885 இல் பென்சின் உரிமம் பெற்ற மோட்டார் வேகன் எனப் பெயரிட்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதுவே முதன் முதலாக அறிமுகப்படுத்தப் பட்ட எரிபொருள் பயன்படுத்தப்பட்ட சொந்த சக்தியில் இயங்கும் வாகனமாகும்.

1886-1893 இடைப்பட்ட காலத்தில் 25 ‘மோட்டார் வேகன்’ வாகனம் உற்பத்தி செய்யப்பட்டது.

1893 கார்ல் பென்ஸ் தனது 2.2கிலோ வாட்டு உடன் இயங்கும் இருபயணிகள் வாகனமான விக்டோரியா உருவாக்கினர். மேலும் கசொலின்(gasolin) எனப்படும் பெட்ரோல் எந்திரத்தைக் கண்டு பிடித்தவராக கருதப்படுகிறார்.
சி. பென்சு சோனே எனும் நிறுவனத்தை 1906 இல் ஆரம்பித்தார். 

விருதுகள்:-

1914- கார்ல்சியோ பல்கலைக் கழகம் அவருக்கு கௌரவ கலாநிதிப் பட்டம் வழங்கி கௌரவித்தது.

மறைவு:-

ஏப்ரல்-04, 1929 இல்,  லேடன்பேர்க்கில், 84 வது வயதில் மரணமடைந்தார்.

No comments:

Powered by Blogger.