Breaking

ஜனவரி-29. அறிவியல் நோபல் பரிசு பெற்ற முதல் முஸ்லீம் விஞ்ஞானி அப்துஸ் சலாம் (Mohammad Abdus Salam) பிறந்த தினம்.





🥇🥇🥇🥇🥇🥇🥇🥇



பாகிஸ்தானில் இருந்து அறிவியலில் நோபல் பரிசு பெற்ற ஒரே ஒரு ஆளுமை இவர் தான். 


பிரிக்கப்படாத இந்தியாவில் ஊரில் சாண்டோக்தாஸ் என்ற இடத்தில் ஜனவரி -29, 1926 ஆம் ஆண்டு பிறந்தார்.



இளம் வயதில் படிப்பில் சுட்டியாக இருந்த இவரை பட்டப்படிப்பில் ஆங்கில இலக்கியம் எடுத்து ஆசிரியராக ஆகச்சொல்லி ஆசிரியர்கள் சொன்னார்கள். 


இவரோ தனக்கு கணிதத்தில் ஆர்வம் என்று சொல்லி கணிதத்தை பாடமாக தேர்வு செய்தார்.


ஸ்ரீனிவாச ராமானுஜத்தின் கணித சிக்கல்கள் பற்றிய ஒரு நூலை எழுதி வெளியிட்டார்.


ரயில்வே துறையில் சேரச்சொல்லி சிவில் சர்வீஸ் தேர்வுக்கு அனுப்பினார்கள்.


கண்ணாடி  போட்டிருந்தார் என்றும்,வயது போதவில்லை என்றும் சொல்லி வேலை தரவில்லை. 


அதை விட பெரிய கூத்தாக மெக்கானிகல் படிப்பு சார்ந்த தேர்வில் தேறவில்லை என்றும் சொல்லி அனுப்பிவிட்டார்கள்.


பின்னர் இங்கிலாந்து போய் இயற்பியல் மற்றும் கணிதத்தில் முதல் நிலை மாணவராக பட்டம் பெற்று தேறினார்.


டிராக் மற்றும் பெய்ன்மன் ஆகியோராலேயே தீர்க்க முடியாத மீசான்கள் பற்றிய சிக்கலை இளம் வயதிலேயே தீர்த்தார்.


முனைவர் பட்ட ஆய்வுக்கு ஆடம் பரிசு பெற்று பாகிஸ்தான் திரும்பினார். தன் சொந்த நாட்டிற்கு திரும்பி கணித பேராசிரியர் ஆனார்.


அங்கே குவாண்டம் இயங்கியலை மாணவர்களுக்கு பாடமாக வைக்க முயன்ற பொழுது எல்லாரும் எதிர்த்தார்கள். 


மாலை வேலைகளில் அதை தனியாக பிள்ளைகளுக்கு பாடமாக சொல்லித்தந்தார் சலாம். 


ஒரு பதினைந்து ஆண்டுகாலம் தொடர்ந்து பாகிஸ்தானின் அறிவியல் ஆலோசகராக இருந்தார் சலாம்.


எலெக்ட்ரோ வீக் கோட்பாட்டை அவர் வகுத்து தந்தார்.


விசைகளில் நான்கு வகையான விசைகள் உண்டு ; அதில் வலிகுறை இடைவினை மற்றும் மின்காந்த விசை இரண்டும் வெவ்வேறு என்கிற கருத்தாக்கம் இருந்தது. இவை இரண்டையும் இணைத்து பார்த்தார் சலாம். அதை கோட்பாட்டு ரீதியாக நிரூபித்தார்.


 ஆய்வுகளில் இரண்டு விசைகளும்  246 GeV ஆற்றல் மற்றும்  மிக உயரிய வெப்பநிலையில் ஒரே ஆற்றலாக இணைந்து வலிகுறை மின் ஆற்றலாக மாறியது

அவரின் கருத்தை உறுதி செய்தது.


இதற்காக அவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


இந்திய அமெரிக்க பிரஜையான ஜோகி பாட்டியுடன் இணைந்து குவார்க்குகள் சார்ந்து இவர் உருவாக்கிய பெரு இணைப்பு கோட்பாடு பாட்டி-சலாம் மாதிரி என்று அறியப்படுகிறது.


பாகிஸ்தானின் அறிவியல் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றிய சலாம் அந்நாட்டின் விண்வெளி மையத்தை நிறுவினார்.


அணு குண்டு தயாரிக்க பாகிஸ்தானின் முயற்சிகளில் முக்கிய பங்கு இவரால் மேற்கொள்ளப்பட்டது.


அமெரிக்கா போய் மேன்ஹாட்டன் திட்டத்தினை முழுமையாக தெரிந்து கொண்டு,அணு குண்டு தயாரிக்க வேண்டிய கணக்கீடுகளையும் அறிந்து கொண்டு வந்தார். 


சீனாவுக்கும் போய் அணுகுண்டுகள் பற்றி அறிந்து கொண்டு நாட்டை வேகமாக அந்த பாதையில் நகர்த்தினார்.


 கோட்பாட்டு இயற்பியல் சார்ந்த விஞ்ஞானிகள் குழுவை நிர்மாணித்து அணு சக்தியை பயன்படுத்தும் நாடுகளில் ஒன்றாக ஆகும் கனவை நோக்கி பாகிஸ்தானை நகர்த்தினார். ஆனால்,அது முழுமையாவதற்கு முன்னரே ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.


நவம்பர்-21, 1996 ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். பிறகு அவரின் தாய்-தந்தையர் புதைக்கப்பட்ட இடத்துக்கு அருகில் புதைத்தார்கள். அவரின் கல்லறையில் 'அறிவியல் நோபல் பரிசு பெற்ற முதல் இஷ்லாமிய விஞ்ஞானி' என்று எழுதியிருந்தார்கள். கோர்ட் அப்படியெல்லாம் எழுதக்கூடாது,அவரின் அஹமதியா பிரிவு தான் இஸ்லாமில் சேராதே என்று சொல்லி முஸ்லீம் என்கிற வார்த்தையை எடுக்கச்சொல்லி விட்டார்கள். முதல் நோபல் பரிசு பெற்றவர் என்று மட்டும் அவரின் கல்லறையில் எழுதி இருக்கிறது. வலிகள் வாழ்க்கைக்கு பின்னும் மேதைகளை தொடரத்தான் செய்கிறது.

🎽🎽🎽🎽🎽🎽🎽🎽

No comments:

Powered by Blogger.