Breaking

நவம்பர்-30. !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! 🌴 தாவரங்களுக்கும் உயிர் உண்டு🌴 என்று கண்டுபிடித்த அறிவியலாளர்- சர் ஜெகதீஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்.







இன்று பிறந்த நாள்: நவம்பர்-30.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

🌴 தாவரங்களுக்கும் உயிர் உண்டு🌴 என்று கண்டுபிடித்த அறிவியலாளர்- சர் ஜெகதீஷ் சந்திரபோஸ் பிறந்த தினம்.


வங்காளத்தில் விக்ரம்பூரில் பிறந்தவர்.


 🍄எதையும் உற்றுநோக்கும் குணமும், நிறைய விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமும் இயற்கையிலேயே இருந்தது.


🍁பட்டப்படிப்பை முடித்ததும் கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் அறிவியல் கற்றார்.


 🌻வைஸ்ராய் சிபாரிசுடன் கல்கத்தா மாநிலக் கல்லூரியில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார்.


🌼கஷ்டமான சூழலிலும், 3 ஆண்டுகள் சம்பளமே வாங்காமல் வேலை பார்த்தார்.


 🌸 அறிவாற்றல், கற்பிக்கும் திறனால் பேரும் புகழும் பெற்றார்.  


சில மாதங்களுக்கு பிறகு தன் வீட்டிலேயே ஆராய்ச்சிக்கூடம் அமைத்தார். 


🍃1894 ல் தன் ஆயுள் முழுவதையும் ஆராய்ச்சிக்கே அர்ப்பணிப்பது என்று  முடிவெடுத்தார்.


 🍀முதலில் மின்சாரம் பற்றி ஆராய்ந்தார்.


🌷 மின் அலைகள், கம்பிகளின் உதவியின்றி பொருட்களைக் கடந்து செல்லக்கூடியவை என்று கண்டறிந்தார்.


🌺 மின்காந்த அலைகளின் பகுதி ஒளித் தன்மைகளை (quasi-optical) கண்டறியும் கருவியைக் கண்டுபிடித்தார்.


🌱 மிகக் குறைந்த அலை நீளம் கொண்ட நுண்ணலைகளை உருவாக்கும் இயந்திரத்தை முதன்முதலில் வடிவமைத்தார்.


🌿 போட்டோகிராபிக் கோட்பாட்டை உருவாக்கினார்.


 🎋 இவரது ஆராய்ச்சி பற்றிய கட்டுரைகள் ராயல் சொசைட்டி இதழில் வெளிவந்தன. 


🌳 லண்டன் பல்கலைக்கழகம் இவருக்கு ‘டாக்டர் ஆஃப் சயின்ஸ்’ பட்டம் வழங்கியது.


🌲பல நாடுகளின் அறிவியல் கழகங்களில் சொற்பொழிவுகள் நிகழ்த்தினார். இந்தியாவின் புகழ் உலகம் முழுவதும் பரவியது. 




🎄பல பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்களை வழங்கின. 


🌵 இவர் தாவரவியளில் ஆராய்ச்சி 🌱 தாவரங்களுக்கு உயிர், உணர்ச்சிகள் உண்டு☘ என்பதை ஆதாரங்களுடன் பாரீஸ் மாநாட்டில் நிரூபித்தார்.


 🌾 இந்த உண்மைகளை கண்கூடாகக் காட்ட உதவும் ‘ரெஸனன்ட் ரெக்கார்ட்’, ‘கிரெஸ்கோகிராப்’ ஆகிய கருவிகளை அரும்பாடுபட்டு உருவாக்கினார்.


🌸 ‘ரெஸ்பான்ஸ் இன் லிவிங் அண்ட் நான் லிவிங்’, ‘த நெர்வஸ் மெக்கானிஸம் ஆப் பிளான்ட்ஸ்’ ஆகிய 2 நூல்களும் இவருக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்தன.


🌺ஆண்டு வருமானத்தில் தனது அத்தியாவசியத் தேவைக்கு ஐந்தில் ஒரு பங்கை வைத்துக்கொண்டு எஞ்சிய தொகையை அறிவியல் பயிலும் மாணவர்களுக்குச் செலவழித்தார். 


 🇮🇳 இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பல லட்சம் ரூபாய் உயில் எழுதிவைத்த இந்த தேசபக்த விஞ்ஞானி 79 வயதில் காலமானார்.

!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

No comments:

Powered by Blogger.