Breaking

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி வீரர்கள் முதன்முதலில் சென்ற தினம்.



சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு விண்வெளி  வீரர்கள் முதன்முதலில் சென்ற தினம்.

விண்வெளி வீரர்கள் அங்கு தங்கி உயிரியல், இயற்பியல், வானவியல், வானிலை மற்றும் பிற துறைகளில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறனர்.  

2000ஆம் ஆண்டு  நவம்பர் 2ஆம் தேதி தான் முதன்முதலில் பில் ஷெப்பர்ட், யூரி மற்றும் செர்ஜி ஆகிய மூன்று விண்வெளி வீரர்களும் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

17 நாடுகளில் இருந்து 220 விண்வெளி வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையம் சென்றுள்ளனர்.

சர்வதேச விண்வெளி நிலையம் இதுவரை பூமியை 87,600 முறை சுற்றிவந்துள்ளது.

ஒன்பது நாடுகளில் இருந்து 122 வீரர்கள் spacewalks என்று கூறப்படும் விண்வெளி நிலையத்திற்கு வெளியே வந்து மிதந்தபடி வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

நீண்ட நாள்கள் விண்வெளியில் இருப்பதால் ஏற்படும் விளைவுகளை அறிந்துக்
கொள்வதற்காக அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்காட் கெல்லி 522 நாட்களாக அங்கு தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்பகுதியில் படுக்கை அறையுடன் கூடிய 6 வீடுகள் அளவிற்கு மனிதர்கள் வசிப்பதற்கான இடம் உள்ளது.

இதன் எடை 454,000 கிலோ கிராம். 3.3 மில்லியன் மென்பொருள் குறியீடு கோடுகள் மூலம் இயக்கப்படுகிறது.

No comments:

Powered by Blogger.