கல்லீரலின் செயல்பாடுகள் என்னென்ன?
கல்லீரல் என்பது வயிற்றின் வலது பக்கத்தில் உள்ள ஒரு பெரிய உறுப்பு ஆகும். சுமார் 1. 4 கிலோ எடையுள்ள கல்லீரல், சிவப்பு-பழுப்பு நிறத்தில் உள்ளது . பொதுவாக நீங்கள் கல்லீரலை உணர முடியாது, ஏனெனில் இது விலா எலும்புக் கூண்டால் பாதுகாக்கப்படுகிறது.
கல்லீரலில் இரண்டு பெரிய பிரிவுகள் உள்ளன, அவை வலது மற்றும் இடது மடல்கள் என்று அழைக்கப்படுகின்றன. கணையம் மற்றும் குடலின் சில பகுதிகளுடன் பித்தப்பை கல்லீரலின் கீழ் அமர்ந்திருக்கும். கல்லீரலும் இந்த உறுப்புகளும் ஒன்றாகச் சேர்ந்து உணவை ஜீரணிக்கவும், உறிஞ்சவும்,பதப்படுத்தவும் உதவுகின்றன.
கல்லீரலின் செயல்பாடுகள் என்னென்ன?
கல்லீரலின் முக்கிய செயல்பாடு உடலின் வளர்சிதை மாற்றத்தில் பங்களிப்பு.
உணவை உடைத்து ஆற்றலைப் பிரித்தெடுப்பது.
நச்சுகள் உடலுக்குக் குறைவான தீங்கு விளைவிக்கும் வகையில் அவற்றை இரத்த ஓட்டத்திலிருந்து அகற்றும்.
செரிமான உறுப்புகளிலிருந்து, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இரத்தத்தை நரம்பு வழியாகப் பெறும் வேலையைக் கல்லீரல் செய்கிறது.
கல்லீரலின் பல செல்கள், ஹெபடோசைட்டுகள் என அழைக்கப்படுகின்றன. இவை இரத்தத்தை வடிகட்டுவதோடு சுத்திகரிக்கின்றன. அவை, எந்த ஊட்டச்சத்துக்கள் பதப்படுத்தப்பட வேண்டும்? எதைச் சேமிக்க வேண்டும்? மலத்தின் வழியாக என்ன வெளியேற்றப்பட வேண்டும்? இரத்தத்திற்கு என்ன செல்ல வேண்டும் ? போன்றவற்றை நிர்ணயிக்கிறது.
கல்லீரல் வைட்டமின்கள் , செம்பு மற்றும் இரும்பு போன்ற தாத்துக்களைச் சேமித்து, உடலுக்குத் தேவைப்பட்டால் அவற்றை வெளியிடுகிறது. ஒரு நபரின் உணவில் உள்ள கொழுப்புகளை உடைக்க கல்லீரல் உதவுகிறது. இது கொழுப்புகளைச் சேமித்து வைக்கிறது அல்லது அவற்றை ஆற்றலாக வெளியிடுகிறது.
இது ஒரு நாளைக்கு 800 முதல் 1,000 மில்லி லிட்டர்கள் வரை பித்தத்தின் மூலத்தையும் உற்பத்தி செய்கிறது. இந்த பித்தம் பித்த நாளத்தின் வழியாகச் சிறுகுடலுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. சிறுகுடல் கொழுப்பை மேலும் உடைக்க பித்தத்தைப் பயன்படுத்துகிறது. கூடுதல் பித்தம் பித்தப்பையில் சேமிக்கப்படுகிறது.
இரத்தத்தில் உள்ள ஆல்கஹால் மற்றும் நீங்கள் எடுக்கும் பல மருந்துகளையும் உடைக்கிறது.
நோய்த்தொற்றுக்கு எதிராகப் போராடக்கூடிய நோயெதிர்ப்பு அமைப்பு காரணிகளை உருவாக்குகிறது.
இரத்த உறைவுக்கு காரணமான புரதங்களை உருவாக்குகிறது.
பழைய மற்றும் சேதமடைந்த சிவப்பு இரத்த அணுக்களை உடைத்தல், கூடுதல் இரத்த சர்க்கரையை கிளைகோஜனாக சேமிக்கிறது

No comments: