திமிங்கில இதயத் துடிப்பு பதிவு!
திமிங்கில இதயத் துடிப்பு பதிவு!
கடல்வாழ் உயிரினங்களிலேயே மிகப் பெரியது நீலத் திமிங்கிலம். இதன் இதயத் துடிப்பை முதல் முறையாக, அமெரிக்காவின் ஸ்டான்போர்டு பல்கலைக்கழக விஞ்ஞானிகள் பதிவு செய்துள்ளனர்.
பரந்த கடலில் ஒரு நீலத் திமிங்கிலத்தை கண்டுபிடித்து, அதன் இதயம் உள்ள இடப் பகுதி துடுப்புக்கு அருகே, ஒரு உணரியை ஒட்டவைப்பது சாதாரண காரியமல்ல.இருந்தும் ஸ்டான்போர்டு ஆராய்ச்சியாளர்கள், அதை செய்து காட்டியதுடன், நீலத் திமிங்கிலத்தின் இதயத் துடிப்புகளை, அது பல்வேறு செயல்களில் ஈடுபடுகையில் துல்லியமாக பதிவு செய்து சாதனை படைத்துள்ளனர்.உணரிகளின் பதிவுகளை ஆராய்ந்தபோது, அது கடலுக்குள் இரை தேடுகையில் நிமிடத்திற்கு நான்கு முதல் எட்டு முறையும், கடல் மேற்பரப்பில் வந்து சுவாசித்துவிட்டு திரும்புகையில் நிமிடத்திற்கு, 37 முறையும்நீலத் திமிங்கிலத்தின் இதயம் துடிப்பது பதிவாகி உள்ளது.
அது சற்று ஓய்வாக இருக்கையில் அதன் துடிப்பு நிமிடத்திற்கு இரண்டே முறைதான் துடித்துள்ளது.அடுத்த முறை, ஒரு வேகமானியையும் உணரிகளுடன் இணைத்து, திமிங்கிலத்தின் இதயப் பகுதியில் ஒட்டவைத்து ஆராயவிருப்பதாக ஸ்டான்போர்டு விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

No comments: