பாத்திரங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளை பற்றி அறிவோம்
தற்போதைய காலகட்டத்தில் அலுமினியப்பாத்திரங்கள் பரந்துபட்ட பாவனையை அடைந்துவிட்டது. மலிவாகக் கிடைப்பதனால், ஏழைகள் பணக்காரர்கள் எனும் வித்தியாசமின்றி அனைவரும் அலுமினியப் பாத்திரங்களை அதிகம் வாங்குகின்றனர்.
உலகில் அதிகம் கிடைக்கும் உலோகங்களில் அலுமினியமும் ஒன்றாகும். அலுமினியத்தை எளிதாக வளைக்கலாம்; நெளிக்கலாம் என்பதனால் இவற்றால் மிக எளிதில் பாத்திரங்களை உருவாக்கலாம். மருந்து அட்டைகள், பொதிப்பக்கற்றுகள், மென்பான கொள்கலன்கள் போன்றவையும் அலுமினியத்தினால் தயாரிக்கப்படுகின்றன. இதுபோன்ற நிறைய விடயங்களில் அலுமினியத்தின் உபயோகம் காணப்படுகிறது.
அலுமினியப் பாத்திரங்களை தயாரிப்பதும், வாங்குவதும் எளிது என்பதால் நாம் அவற்றின் மூலம் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகளை அறியாமலேயே அவற்றை பயன்படுத்திக்கொண்டிருக்கிறோம்.


No comments: