பருவகாலங்கள்(season) ஏற்படுவது ஏன் என்பதை தெரிந்து கொள்வோம்
👉பூமியானது சூரியனைச் சுற்றியுள்ள அதன் சுற்றுப்பாதையின் (orbits) தளத்திலிருந்து(plane) 23 1/2° கோணத்தில் சாய்ந்துள்ளது(Tilted).
👉இதன் காரணமாக பூமி சூரியனைச் சுற்றி செல்லும்போது எப்போதும் ஒரு பக்கமாக புவிப்பரப்பை சுட்டிக்காட்டுகிறது.
👉இதனால் பூமியில் கிடைக்கும் சூரிய ஒளியின் அளவு (amount of sunrays)ஆண்டு முழுவதும் மாறுபடுகிறது(keeps varying).
சூரிய ஒளி கிடைப்பதிலுள்ள இந்த வேறுபாடு பூமியில் பருவகாலங்களை உருவாக்குகிறது.
👉 பருவகாலமானது ஆண்டின் நான்கு காலகட்டங்களில் (periods) ஒன்றாகும்.அவை வசந்த காலம்(spring), கோடை காலம்(summer), இலையுதிர் காலம்(autumn) மற்றும் குளிர்காலம்(winter).
👉வட துருவமானது (north pole) சூரியனை நோக்கி சாய்ந்தால் (tilts), அது வடக்கு அரைக்கோளத்தில் (Northern Hemisphere) கோடைகாலமாகும். தென் துருவமானது (south pole) சூரியனை நோக்கி சாய்ந்தால், அது வடக்கு அரைக்கோளத்தில் (northern Hemisphere) குளிர்காலமாகும்.
👉வானிலை (weather) என்பது அடிப்படையில் மனித வாழ்க்கை மற்றும் நடவடிக்கைகளின் விளைவுகளினால் வளிமண்டலம் நடந்து கொள்ளும் விதத்தைக் குறிக்கிறது.ஒவ்வொரு நாளும் வானிலை மாறலாம்.
👉காலநிலை (climate) என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில் பல ஆண்டுகளில் எதிர்பார்க்கப்படும் சராசரி நிலைமைகளாகும்.ஒரு இடத்தின் காலநிலையை மாற்ற பல ஆயிரம் ஆண்டுகள் ஆகலாம்.

No comments: