Breaking

அக்டோபர்-04 முதல் 10 வரை.. உலக விண்வெளி வாரம்(World Space Week (WSW)

அக்டோபர்-04 முதல் 10 வரை..

உலக விண்வெளி வாரம்(World Space Week (WSW) 

இந்த இடைப்பட்ட நாட்களை உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது.

ரஷியாவுக்கு சொந்தமான ஸ்புட்னிக் 1 (Sputnik 1) என்ற செயற்கைகோள் உலகின் முதல் செயற்கைக்கோளாக 4-10-1957 அன்று விண்வெளியில் செலுத்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் நான்காம் தேதி முதல் பத்தாம் தேதிவரை ஒருவார காலம் உலக விண்வெளி வாரமாக கொண்டாடப்படுகிறது.

10-10-1967 அன்று உலகின் முக்கிய நாடுகளுக்கு இடையில் புற விண்வெளி அமைதி உடன்படிக்கை உருவாக்கப்பட்டு உலக நாடுகளிடையே ஒப்பந்தம் கையொப்பம் ஆனதாக அறியப்படுகிறது. இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் நான்காம் தேதி முதல் பத்தாம் தேதிக்கு இடைப்பட்ட நாட்களை உலக விண்வெளி வாரமாக கொண்டாட ஐக்கிய நாடுகள் சபை அதிகாரபூர்வமாக அறிவித்தது.


சர்வதேச விண்வெளி வாரமென்பது, அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மனித மேம்பாட்டிற்கும், அமையபெற்று தங்கள் பங்களிப்பை கொடுப்பதாகும். 

ஒவ்வொரு ஆண்டும், உலக விண்வெளி வாரக் கழக வாரியத்தின் (World Space Week Association Board) பணிப்பாளர்கள் மனிதத்துவத்துக்கு அறைகூவல் விடுத்து விண்வெளி அம்சம் பற்றிய முன்னிலைப்படுத்த கருப்பொருள் சேர்க்கிறது. இந்த குழு அவர்களின் திட்டங்கள் உள்ளடக்கத்தை உலக விண்வெளி வாரப் பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டுதலை வழங்குகிறது.

No comments:

Powered by Blogger.