Breaking

04.12.2019..இன்றைய ராசி பலன்






மேஷம்:- 

விதி உங்களை எவ்வளவு சோதனைக்கு உள்ளாக்கினாலும், டென்ஷன் ஆகாமல், பதட்டம் அடையாமல், சற்று நிதானமாக செயல்படுங்கள். உங்கள் உடனிருப்பவர்கள் உங்களது கடமையை எடுத்துக் கொள்ள விரும்பினால், அவர்களை நம்புங்கள். இப்போது வேறு வழியில்லை.

ரிஷபம்:- 

உங்கள் பாதையில் மிக மிக கவனமாக செயல்பட வேண்டிய காலக்கட்டம் இது. உங்கள் பார்வை மிகவும் கூர்மையாக இருக்க வேண்டும், நிதி நிலைமையில் சில சிக்கல்கள் இருந்தாலும், இதுவும் கடந்து போகும் என்று கடந்து செல்லுங்கள். நிலைமை மாறும்.


மிதுனம்:-
உங்கள் கருத்துகளை வெளியிட தயங்க வேண்டாம். குடும்பத்தினரிடம் பேசாமல் வேறு யாரிடம் பேசப் போகிறீர்கள்? உங்கள் பொருளாதாரத்தின் மீது மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் நண்பர்களே.

கடகம்:- 

உங்கள் முன்பு பரிதாபப்படுபவர்களை நம்ப வேண்டாம். எது உண்மை என்பதை நீங்கள் தான் உணர வேண்டும். உங்கள் முடிவுகள் தவறாக இருந்தாலும் கவலை கொள்ள வேண்டாம். ஆனால், முடிவுகள் உங்களுடையதாக இருக்கட்டும்.

சிம்மம்:-
குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். உறவினர்களின் தொல்லை இருக்கும். வாகனங்களில் செல்லும்போது மிகுந்த கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் சாதிக்க முடியும். செலவுகளை சரியாக திட்டமிட்டு செலவிட வேண்டியது அவசியம்.

கன்னி:-
எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். குடும்பத்தில் வந்த பிரச்சனைகள் முற்றிலும் விலகும். நண்பர்கள் வகையில் நிறைய உதவி கிடைக்கும். உத்யோகத்தில் சம்பள உயர்வு உண்டு. கணவன் – மனைவி உறவில் விரிசல் நீங்கும்.

துலாம்:-
குடும்ப ஒற்றுமை மேலோங்கும். கடன் வாங்கும் பழக்கத்தை கை விடவும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் நிறைய கற்றுக்கொள்ள முடியும். பொறுப்பாக இருக்க வேண்டிய நாள்.

விருச்சிகம்:-

 உடன்பிறப்பு வகையில் பண விரயம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனை கிடைக்கும். கூட்டு தொழில், வியாபாரம் சிறப்பாக இருக்கும். நண்பர்களின் தவறான சேர்க்கையை தவிர்க்கவும்.

தனுசு:-

குடும்பத்தில் விட்டு கொடுத்து போவது நல்லது. உங்கள் செயல்களில் வேகமும், விவேகமும் இருக்கும். ஆடை, ஆபர்ண பொருள் சேர்க்கை உண்டாகும். தொழில், வியாபாரம் சூடு பிடிக்கும். மிக கவனமாக அனைத்தையும் கையாள வேண்டியது அவசியம்.

மகரம்:-

புதிய முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. குல தெய்வ பிராத்தனை நிறைவேறும். கடன் விவகாரத்தில் கூடுதல் கவனம் தேவை. தொழில், வியாபாரத்தில் நிறைய வாய்ப்புகள் வரும். மனமாற்றம் ஏற்படும். காதல் விவகாரம் கைகூடும்.

கும்பம்:-

சில தடுமாற்றம் இருந்தாலும், கவலை வேண்டாம். சிறு சிறு சலசலப்புகள் வந்து நீங்கும். அது உங்கள் பொறுமையை சோதித்துப் பார்க்கும் அம்சமே. இறுதியில் வெற்றி உறுதி. குடும்பத்தில் நிம்மதி நிலவும்.

மீனம்:-

சாதுரியமான பேச்சால் மற்றவர்களை எளிதில் கவருவீர்கள். உடன்பிறந்தோர் நலனில் அக்கறை கொள்ளவும். பணப்புழக்கம் நல்ல முறையில் இருக்கும். தொழில், வியாபாரத்தை பெரியளவில் கொண்டு செல்ல முடியும்.

No comments:

Powered by Blogger.