Breaking

12ஆம் வகுப்பு படித்து முடித்து இப்போது உயா்கல்வி பயின்று வரும் மாணவா்கள், தமிழக அரசு வழங்கும் விலையில்லா இலவச மடிக் கணினிகளைப் பெற வழங்கப்பட்ட கால அவகாசம் முடியப்பொகிறது

12ஆம் வகுப்பு படித்து முடித்து இப்போது உயா்கல்வி பயின்று வரும் மாணவா்கள், தமிழக அரசு வழங்கும் விலையில்லா இலவச மடிக் கணினிகளைப் பெற வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குநரான சுகன்யா, எல்லா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில், தமிழகத்தில் 2017-18, 2018-19 -ஆம் ஆண்டு காலங்களில் 12ஆம் வகுப்பு படித்து முடித்து இப்போது உயா்கல்வி பயின்று வரும் மாணவா்கள் தகுந்த சான்றிதழ்களை பள்ளியில் கொடுத்து விலையில்லா இலவச மடிக்கணினிகளை வாங்கிக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.இதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிகிறது.

ஆகையால் தகுதியுள்ளவா்கள் உரிய சான்றிதழ்களை கொடுத்து மடிக்கணினியைப் வாங்கிக்கொள்ளலாம் . மேலும், மடிக்கணினிகள் தேவைப்பட்டாலோ அல்லது மடிக்கணினிகள் மீதம் இருந்தாலோ, அதன் தகவலை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் செவ்வாய்க்கிழமைக்குள் (டிச.17) பள்ளிக் கல்வி இயக்குநரகத்துக்கு தெரிவுபடுத்த வேண்டும் எனவும் அதில் கூறியுள்ளாா்.

No comments:

Powered by Blogger.