Breaking

அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அறிவிப்பு.


இந்தியாவில் உள்ள அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 15-முதல் மார்ச் 30-வரை நடக்க இருக்கிறது. 137 வகையான பாடப்பிரிவுகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை சி.பி.எஸ்.இ. வெளியிட்டுள்ளது.

110 வகையான பாடப்பிரிவுகளுக்கு தேர்வுகள் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடக்க இருக்கிறது. 19 பாடப்பிரிவுகளுக்கு காலை 10.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை நடக்கிறது. குறிப்பிட்ட 8 பாடப்பிரிவுகளுக்கு மட்டும் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை தேர்வுகள் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.


காலை 10 மணி முதல் 10.15 வரை மாணவர்களுக்கு விடைத்தாள்கள் தகவல்கள் நிரப்ப நேரம் ஒதுக்கப்படும். 10.15 மணிக்கு வினாத்தாள் வழங்கப்படும்.வினாத்தாளை வாசிக்கவும் 15 நிமிடங்கள் ஒதுக்கப்படும்.
அதன் பின்னரே 10.30 மணிக்கு தேர்வு தொடங்கும் எனவும், கூடுதல் தகவல்களுக்கு www.cbse.nic.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும் சிபிஎஸ்இ தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.

No comments:

Powered by Blogger.