இன்றுு பிறந்தநாள் டிசம்பர்-15
நோபல் பெற்ற அறிவியலாளர்- என்றி பெக்கெரல்(Antoine Henri Becquerel )பிறந்த தினம்.
அந்துவான் என்றி பெக்கெரல் பிரான்சிய இயற்பியலாளர் ஆவார். கதிரியக்கத்தைக் கண்டுபிடித்தமைக்காக இவருக்கு 1903 இல் நோபல் பரிசு வழங்கப்பட்டது.
கதிரியக்கத்தின் எஸ்.ஐ முறை அலகுக்கு இவரது நினைவாக பெக்கெரல் (Bq) எனப் பெயர் சூட்டப்பட்டது.
பிரான்ஸ் நாட்டு விஞ்ஞான வித்தகர்களிலே ஒருவராக விளங்கிய பேராசிரியர் ஹென்றி பெக்கெரல் என்பவர், ஃபாஸ்ஃபரஸ்ன்ஸ் என்ற 'ஒளிர்தல் தத்துவத்தை ஆராய்ந்து கொண்டிருந்தார். வெயில் சூடேறும்படி விடப்பட்டிருந்த பொருள்களில் சில, பின்னர் இருட்டில் பளபள என்று ஒளி வீசுவதைப் பற்றிய ஆராய்ச்சியே அந்த ஒளிர்தல் என்ற தத்துவம். அவருடைய அறிவியல் ஆய்வில், யூரேனியம் அடங்கிய பொருளாகிய பிட்சு-பிலெண்ட் என்பதில் யுரேனியத்தைத் தவிர, வேறு ஏதோ ஒரு தனிமம் இருக்கிறது என்பதைக் கண்டார்.
No comments: