Breaking

டிசம்பர்-17. இலார்டு கெல்வின் என அழைக்கப்பட்டவரும், அயர்லாந்தைச் சேர்ந்த கணித இயற்பியல் அறிஞரும், பொறியியல் அறிஞர்- வில்லியம் தாம்சன் (William Thomson) மறைந்த தினம்.

இன்று நினைவு நாள்:- டிசம்பர்-17.

இலார்டு கெல்வின் என
அழைக்கப்பட்டவரும்,
அயர்லாந்தைச் சேர்ந்த கணித இயற்பியல் அறிஞரும், பொறியியல் அறிஞர்-
வில்லியம் தாம்சன்
(William Thomson) மறைந்த தினம்.

பிறப்பு:-

1824 ஆம் ஆண்டு,ஜூன்-26 ஆம் தேதி அயர்லாந்தில் உள்ள பெல்ஃபாசுட்டு நகரில் பிறந்தார். 
இவர் தந்தையார் சேம்சு தாம்சன்  பயிர்த் தொழிலாளர் ஆவார். ஆரம்பத்தில்  வீட்டிலேயே அவர்களின் அக்காவால் கல்வி பயிற்றுவிக்கப் பட்டது. பின்னர் இலண்டன் நகரிலும், பாரிசிலும், ஸ்காட்லாந்து நெதர்லாந்திலும் பல மொழிகள் கற்றனர். மேலும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார்.

பணிகள்:- 

கணிதவியல் 
பேராசிரியராகப் பெல்ஃபாசுட்டு வேதியக் கல்விக் கழகத்தில் பணிபுரிந்தார். 
வில்லியம் தாம்சன் 1845 இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் இரண்டாவது 'இராங்கலர்' (Second Wrangler) ஆகத் தேர்ச்சி பெற்றார். புதிய ஆய்வுக்கான சுமித் பரிசை (Smith Prize) வென்றார். 

ஆராய்ச்சிகள்:-

மின்காந்தவியல்- இங்கிலாந்திற்கும், அமெரிக்காவிற்கும் இடையே தந்திக் கம்பிகள் (Telegraphic wires) அமைக்க முயன்று தோல்விகண்டார். எனினும் இவரது விடா முயற்சியைப் பாராட்டி இவருக்கு 'சர்' பட்டம் வழங்கப்பட்டது.

வெப்பவியல்-

வெப்பவியலிலும் தொடந்து ஆய்வுகள் செய்து 1849-ல் அடிப்படையான வெப்ப அளவினை முன்மொழிந்தார். இதன் படி செல்சியசு
(Celsius) அளவினை ஒத்த கெல்வின் வெப்ப அளவு உருவாக்கப்பட்டது. இங்கு அடிப்படை வெப்பமான சுழியப்புள்ளி
(Zero point) 
(O K)-273 °Cஆக அமைக்கப்பட்டது. 

வானவியல்-

வில்லியம் தாம்சன் ஆரம்பக்கட்ட, உருகிய கோள வடிவ பாறைக் குழம்பிலிருந்து புவி தற்போதுள்ளது போலத் திட வடிவம் பெற எத்தனை காலம் பிடித்திருக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்துக் கூறினார். 
சூரியனின்அதிக எல்லை வாழ்நாளையும் இவர் கணக்கிட்டார். சுருங்குதல் மூலம் ஏற்படும் வெப்ப ஆற்றலின் தொடர்ந்த வெளிப்பாடு காரணமாகச் சூரியனில் வெப்ப ஆற்றல் வெளிப்படுவதை கணிதக் கோட்பாடுகள்
மூலம் இவர் கணித்தார். இதனைக் கெல்வின் எலம்ஃகோல்ட்சு கால அளவு (Kelvin Helmholtz) என அழைக்கப்படுகிறது. இது பிற்காலத்தில் ஏற்புடையதல்ல என அறியப்பட்டது என்றாலும், தகுந்த கருவிகள் இல்லாத அக்காலத்தில் இவர் நிகழ்த்திய இக்கண்டுபிடிப்பு போற்றப்பட்டது.

விருதுகள்:-

முதல் ஸ்மித் பரிசு -(1845),
ராயல் மெடல்- (1856),
கீத் பதக்கம்- (1864),
மேட்டூசி மெடல்- (1876),
ஆல்பர்ட் மெடல்- (1879),
கோப்ளி மெடல்- (1883),
ஜான் ஃபிரிட்ஸ் மெடல் -(1905) போன்ற விருதுகளை பெற்றார்.

மறைவு:-

19 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த அறிவியல் அறிஞர்களில் ஒருவராகக் கருதப்பட்டவர், மின் காந்தவியல்,
வெப்பவியல் துறைகளில் பல சிறந்த பல ஆய்வுகள் செய்தார். வெப்ப இயக்கவியலின் அடிப்படையான தனிமுழு வெப்பஅளவீட்டு முறையை நிறுவப் பரிந்துரைத்தும் அவற்றை ஆய்வுகளும் செய்த இவர்,
1907 ஆம் ஆண்டு,டிசம்பர்-17-ஆம் தேதி  மரணமடைந்தார்.

 சிறப்புகள்:-

ஸ்காட்லாந்தில்
உள்ள கிளாசுக்கோ பல்கலைக்கழகத்தை ஒட்டி ஓடும் கெல்வின் என்னும் பெயருடைய ஆற்றின் அடிப்படையில் இவருக்கு இலார்டு கெல்வின் எனப் பட்டம் சூட்டப்பட்டது. 

தனிமுழு வெப்பநிலை அளவீட்டு முறையில், இவர் நினைவாகக் 
கெல்வின் என்பது வெப்ப அலகாகப் பயன்படுகின்றது.

No comments:

Powered by Blogger.