Breaking

டிசம்பர்-22 தேசிய கணித தினம்.. கணிதமேதை சீனிவாச ராமனுஜர் பற்றிய தொகுப்பு..


டிசம்பர்-22
தேசிய கணித தினம்.. கணிதமேதை சீனிவாச ராமனுஜர் பற்றிய தொகுப்பு..




  


💢 தமிழகத்தின் பெருமையை உலகறியச் செய்த கணிதமேதை ராமானுஜத்தின்  வது பிறந்த நாள் இன்று தேசிய கணித தினமாக பல்வேறு கல்விநிறுவனங்களில் கொண்டாடப்பட்டது.

💢கணித மேதை சீனிவாச ராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர்-22ம் நாள் ஈரோட்டில் பிறந்தார். 

💢இவரின் கணித அறிவை மக்கள் அறிந்து கொள்ளவும், இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கவும், இவரது பிறந்த தினம், தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படும் என சென்ற ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்தார்.

💢உலகின் ஆரம்ப கால கணித வளர்ச்சிக்கு இந்தியா, பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. 

💢பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியா தான். 

💢ஆரியபட்டாவுக்கு பின், 16ம் நூற்றாண்டில் கணிதத் துறையில் இந்தியா பின்தங்கியது. 

💢ராமானுஜன் மூலம் 20ம் நூற்றாண்டில் இந்தியா மீண்டும் சிறந்து விளங்கத் தொடங்கியது.

💢ஆர்க்கிமிடிஸ், நியூட்டன் போன்ற விஞ்ஞானிகளுடன் ஒப்பிடப்பட்ட பெருமை ராமானுஜத்துக்கு உண்டு. 

💢இவர், 12வது வயதில், கணித நூல்களை தேடித்தேடி படித்தார். விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க முயன்றார்.

💢ராமானுஜத்தின் கணித அறிவிற்கு மதிப்பெண் கொடுத்தால் அதற்கு நூறு மதிப்பெண் கொடுப்பேன் என்று பிரிட்டன் கணித மேதை ஹார்டி கூறியுள்ளார். அந்த அளவிற்கு எளிமையாகவும், விரைவாகவும் கணித செய்முறைகளை செய்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியவர் ராமானுஜம்.

💢ஹார்டியின் அழைப்பை ஏற்று 1914ம் ஆண்டு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்துக்கு சென்றார் ராமானுஜர். அங்கு சென்ற சில நாட்களிலேயே ராமானுஜனின் திறமை, உலகின் கவனத்தை ஈர்த்தது. இந்த உயர்வில் பேராசிரியர் ஹார்டிக்கு முக்கிய பங்கு உண்டு.

💢உணவு பிரச்னை, வீட்டு நினைவு ஆகிய காரணங்களால் இங்கிலாந்து வாழ்க்கை அவருக்கு ஒத்து வரவில்லை. உடல் நிலை பாதிக்கப்பட்டு, 1917ல் இந்தியா திரும்பி அவர் 1920 ஆம் ஆண்டு மறைந்தார்.

No comments:

Powered by Blogger.