Breaking

டிசம்பர்-23. ஹீலியம் வாயுவைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான பிரெஞ்சு வானியலாளர்-பியேர் ஜூல்ஸ் சேசர் ஜான்சென் (Pierre Jules César Janssen) மறைந்த தினம்.

இன்று நினைவு நாள்:- டிசம்பர்-23.

ஹீலியம் வாயுவைக் கண்டுபிடித்தவர்களில் ஒருவரான பிரெஞ்சு வானியலாளர்-பியேர் ஜூல்ஸ் சேசர் ஜான்சென் (Pierre Jules César Janssen) மறைந்த தினம்.

பிறப்பு:-

பிப்ரவரி-22, 1824 ஆம்  ஆண்டு, பாரிஸ், பிரான்சில் பிறந்தார்.

பணிகள்:-

கணிதம், இயற்பியல் ஆகிய பாடங்களைக் கற்றுப் பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றினார். இவர் பல அறிவியல் நிகழ்வுகளை ஆராய பல நாடுகளுக்கும் சென்று வந்தார்.

ஆராய்ச்சிகள்:-

1857ஆம் ஆண்டில் நிலநடுக் கோட்டின்
காந்தத்தன்மையை ஆராய பெருநாட்டிற்குச் சென்றார். 1867 இல் அசோரெஸ் தீவுகளில் ஒளியியல், காந்தத் தன்மைகளை ஆராய்ந்தார். 

வெள்ளிக்கோளின் நகர்வுகளை 1874இல்ஜப்பானிலும், 1882 
இல் அல்ஜீரியாவிலும்வெற்றிகரமாகக் கண்டறிந்தார். மேலும் முழுமையான சூரிய கிரகணத்தை ஆராயும் பொருட்டு இத்தாலி 
(1867), குண்டூர் (1868), அல்ஜியேர்ஸ் (1870), சியாம் (1875), கரொலைன் தீவுகள் (1883), ஸ்பெயின்(1905) ஆகிய இடங்களுக்கு தனது குழுவினருடன் சென்றார்.
ஆகஸ்ட் 18 இல் இந்தியாவில் சூரிய கிரகணத்தை ஆராயும் போது சூரிய அலையில் 587.49 nm அலைநீளம்
கொண்ட ஒரு வெளிச்சமான 
மஞ்சள் கோட்டைக் கண்டார்.
முதற் தடவையாக இந்த ஒளிப்பட்டைக் கோடு கண்டறியப்பட்டது.
அதே ஆண்டு அக்டோபரில், ஜோசப் நோர்மன் லோக்கியர் என்பவர் இதே கோட்டை கண்டறிந்து இது ஒரு அறிமுகமில்லாத தனிமம் ஒன்றினால் வெளியிடப்பட்டதாக கருதினார். முதற் தடவையாக இதுவே வெளி உலகில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு தனிமம் ஆகும். லொக்கியர் இதற்கு சூரியனின் கிரேக்கப் பெயரான  (Helios- ஹேலியோஸ்) எனப் பெயரிட்டார்.

விருதுகள்:-

Legion of Honour,
1884- சர்வதேச மெரிடியன் மாநாட்டில் கலந்து கொண்டார்.
லண்டனின் ராயல் சொசைட்டி வெளியுறவு உறுப்பினர் ஆவார்.

மறைவு:-

டிசம்பர்-23, 1907 ஆம் ஆண்டு, 
மீடோன், பிரான்சில் மரணமடைந்தார்.

சிறப்புகள்:-

செவ்வாய் கிரகத்திலும்  நிலவிலும் உள்ள குழிபள்ளத்துக்கு இவரது பெயரை வைத்து சிறப்பிக்கப்பட்டது.

மீடோன் ஆய்வகத்தின் முன்னால் பொது சதுக்கத்திற்குப் பிறகு இடம் ஜுல்ஸ் ஜான்ஸ்சன் என பெயரிடப்பட்டது. 

No comments:

Powered by Blogger.