ஆறாவது உலக தமிழர் பொருளாதார மூன்று நாள் மாநாடு-28 ஆம் தேதி சென்னையில் துவக்கம்.
ஆறாவது உலக தமிழர் பொருளாதார மூன்று நாள் மாநாடு, வரும், 28ம் தேதி சென்னையில் துவங்குகிறது.
உலக தமிழர் பொருளாதார மைய தலைவர், வி.ஆர்.எஸ்.சம்பத் கூறியதாவது:
உலக தமிழர் பொருளாதார மாநாடு, 2009ல் துவங்கி, பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வருகிறது. ஐந்தாவது மாநாட்டில், அந்தந்த நகரத்துடன் இணைந்து, உச்சி மாநாடும் நடத்தப்பட்டது.ஆறாவது உலக தமிழர் பொருளாதார மாநாடு, வரும், 28 முதல், 30ம் தேதி வரை, மூன்று நாட்கள், சென்னையில் நடைபெற உள்ளது.
இந்த மாநாட்டில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
மேலும், இலங்கை, மலேஷியா, சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உட்பட, பல்வேறு நாடுகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் பிரதிநிதிகள், தொழில்அதிபர்கள், வணிகர்கள் பங்கேற்கின்றனர்.
மாநாட்டின் நிறைவு விழாவில், தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று, விருதுகள் வழங்குகிறார். இந்த மாநாடு, வணிகம் பெருகவும், முதலீடுகளை ஈர்க்கவும் நடைபெறுகிறது.

No comments: