Breaking

டிசம்பர்-30. இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை மற்றும் இந்திய இயற்பியலாளர்- விக்கிரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai) மறைந்த தினம்.





இன்று நினைவு நாள்:- டிசம்பர்-30.
இந்திய விண்வெளி அறிவியலின் தந்தை மற்றும் இந்திய இயற்பியலாளர்-
விக்கிரம் அம்பாலால் சாராபாய் (Vikram Ambalal Sarabhai)
மறைந்த தினம்.
பிறப்பு:-
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில்
ஆகஸ்ட்-12, 1919 ஆம் ஆண்டு பிறந்தார்.
அறிவியல், கணிதம் இவரது விருப்பப் பாடங்கள் ஆகும். மெட்ரிக் தேறிய பிறகு, மேற்படிப்புக்காக 1939 ஆம் ஆண்டு, இங்கிலாந்து சென்று, கேம்பிரிட்ஜ் செயின்ட் ஜான் கல்லூரியில் இயற்கை அறிவியல் பயின்றார்.
பணிகள்:-
இரண்டாம் உலகப்போர் மூண்டதால் நாடு திரும்பி, பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் சேர்ந்தார். சி.வி.ராமனின் வழிகாட்டுதலில் காஸ்மிக் கதிர்களின் விளைவுகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டார்.
போர் முடிந்ததும், இங்கிலாந்தில் படிப்பைத் தொடர்ந்தார்.
தனது PH. D.,  பட்டம் பெற்ற பிறகு, நாடு திரும்பி,இயற்பியல் ஆராய்ச்சி ஆய்வகத்தை (Physical Research Laboratory) நவம்பர்-11,1947 ஆம் ஆண்டு அகாமதாபாத்தில் நிறுவினார். 1955 ல் காசுமீரம் குலுமார்கில் அதன் கிளை ஒன்றையும் நிறுவினார். பின்னர், திருவனந்தபுரம், கொடைக்கானல் ஆகிய இடங்களிலும் ஆய்வகங்களை நிறுவி ஆராய்ச்சிகள் மேற்கொள்ள வழிவகுத்தார்.
பதவிகள்:-
அகமதாபாத்தில் நெசவுத் தொழில் ஆராய்ச்சிக் கூட தலைவராக இருந்தார்.  சாராபாய் கெமிக்கல்ஸ், சாராபாய் கிளாஸ், சாராபாய் இன்ஜினீயரிங் உட்பட பல தொழிற்சாலைகள் தொடங்க காரணமாக இருந்தார்.
நாட்டில் முறையான நிர்வாகத் துறைக் கல்வியை மேம்படுத்த, இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மேனேஜ்மென்ட் அமைப்பை நிறுவி அதன் தலைவராகச் செயல்பட்டார்.
கல்வி, சமூக மேம்பாடுகளுக்காக நேரு மேம்பாட்டு நிறுவனம் என்ற அமைப்பை நிறுவினார்.
அணுசக்தியைப் பயன்படுத்தி, செழிப்பான கங்கை நதி வளத்தை தெற்கில் உள்ள வறட்சிப் பகுதிகளுக்குத் திருப்பி, அந்த இடங்களை வளம்பெறச் செய்ய வேண்டும் என்பதற்கான பெரிய திட்டங்களை வகுத்தார்.
பள்ளி மாணர்களுக்கு அறிவியல் ஆர்வத்தை ஏற்படுத்த அகமதாபாத்தில் விக்ரம் சாராபாய் கம்யூனிட்டி அறிவியல் மையத்தை நிறுவினார்.


இந்திய தேசிய விண்வெளி ஆராய்ச்சிகளுக்கான குழு பேரவை (INCOSPAR) தொடங்கப்பட்டபோது அதன் தலைவராக நியமிக்கப்பட்டார்.
1969-ல் இதற்கு மாற்றாக இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தொடங்கப்பட்டது. இந்தியாவில் முதன்முதலாக ராக்கெட்டை வடிவமைத்து, அதைச் சோதிப்பதற்கான திட்டங்களை வகுத்தார்.
இந்தியாவின் முதல் செயற்கைக்
கோளான ஆரியபட்டாவின் விண்னில் செலுத்த காரணமானவர்.
SITE -செயற்கைக் கோள் ஏவும் திட்டத்தை வகுத்து, அதன் உதவியுடன் தொலைக்காட்சி மூலம் கல்வியைப் பரப்பி, 2,400 கிராமங்களில் உள்ள மக்கள் கல்வி பயில வழிசெய்தார். 1966-ல் ஹோமிபாபா இறந்ததும், அணுசக்தி துறை இயக்குநர் பதவியில் நியமிக்கப்பட்டார். வியன்னாவில் உள்ள சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
விருதுகள்:-
1969-சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது,
1966-பத்ம பூசண் விருது,
1972-பத்ம விபூஷண் (மறைவுக்குப் பிறகு) போன்ற விருதுகள் வழங்கப்பட்டன.
மறைவு:-
இந்திய விண்வெளி ஆராய்ச்சி, அணுசக்தி ஆராய்ச்சி, ஆராய்ச்சிக் கல்வியின் மேம்பாட்டுக்காக  பாடுபட்ட இவர்,
டிசம்பர்-30, 1971 ஆம் ஆண்டு,
கேரளாவில் மரணமடைந்தார்.
சிறப்புகள்:-
தும்பா ராக்கெட் ஏவுதள நிலையத்துக்கு இவரது பெயர் சூட்டி இந்தியா பெருமைப்படுத்தியது.
1973 ஆம் ஆண்டு, உலகளாவிய வானியல் ஒன்றியம் நிலவிலுள்ள அமைதிக்கடல் (Sea of Serenity) பகுதியில் உள்ள ஒரு பெருங்குழிக்கு விக்கிரமின் பெயரைச் சூட்டி பெருமைப்படுத்தினார்கள்.


No comments:

Powered by Blogger.