Home
DECEMBER
டிசம்பர்-31. பாயில் விதியை வெளியிட்ட அயர்லாந்து வேதியியலாளர், இயற்பியலாளர்- இராபர்ட்டு வில்லியம் பாயில் (Robert William Boyle) மறைந்த தினம்.
டிசம்பர்-31. பாயில் விதியை வெளியிட்ட அயர்லாந்து வேதியியலாளர், இயற்பியலாளர்- இராபர்ட்டு வில்லியம் பாயில் (Robert William Boyle) மறைந்த தினம்.
20:59
Read
இன்று நினைவு நாள்:- டிசம்பர்-31.
பாயில் விதியை வெளியிட்ட
அயர்லாந்து வேதியியலாளர், இயற்பியலாளர்-
இராபர்ட்டு வில்லியம் பாயில் (Robert William Boyle) மறைந்த தினம்.
பிறப்பு:-
அயர்லாந்து நாட்டில் வாட்டர்போர்டு மாகாணத்தில் உள்ள இலிசுமோர் என்னும் இடத்தில் ஜனவரி-25, 1627 ஆம் ஆண்டு
பிறந்தார். தனியார் பாடசாலை மூலம் இலத்தின், கிரேக்கம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளைக் கற்றுக் கொண்டார்.
கண்டுபிடிப்புகள்:-
ராபர்ட் பாயில் ஒரு இரசவாதி ஆவார். மேலும் உலோகங்கள் மாற்றுவதற்கான வாய்ப்பு இருப்பதாக நம்பி இவர் அதை அடைவதற்கான முயற்சியில் சோதனைகள் செய்தார்.
மேலும் பிரெஞ்சு விஞ்ஞானிகள் ஒரு பிஸ்டனைக் கொண்டு வந்தனர் (நாம் போட்டுக் கொள்ளும் ஊசி போன்றது). அந்தப் பிஸ்டனை ஒருபுறம் அழுத்தும் போது உள்ளிருக்கும் வாயுவால் அழுத்தம் ஏற்பட்டு மீண்டும் பிஸ்டன் பழைய நிலைக்கு வர முயன்றது. ஆனால் அதனால் முடியவில்லை. எனவே வாயுவுக்கான அழுத்தம் சரிசமமானது அல்ல என்று பிரெஞ்சு விஞ்ஞானிகள் நிரூபிக்க முனைந்தனர்.
பாயில் மட்டும் இந்தச் சோதனை சரியானதல்ல என்றார். பிஸ்டன் மிகவும் கடினமானதாக இருப்பதால் வாயுவால் திரும்ப அதே நிலைக்கு வைக்க முடியவில்லையே தவிர, வாயுவுக்கான அழுத்தம் சரிசமமானதாகவே இருக்கும் என்றார். சில நாட்களில் அப்படி ஒரு பிஸ்டனைத் தான் தயாரித்து தன் வாதத்தை நிரூபிப்பதாகவும் சவால் விட்டார்.
இரண்டு வாரங்கள் கழித்து, ஒரு ஆங்கில ‘U' வடிவக் குழாய் ஒன்றை எடுத்து வந்தார். அதில் ஒருபுறம் மற்றொன்றை விட மூன்றடி உயரமாக இருந்தது. உயரமாக இருந்த பகுதி ஒல்லியாகவும், உயரம் குறைந்த பகுதி தடிமனாகவும் இருந்தது தடிமனாக இருந்த பகுதியின் மேற்புறம் அடைக்கப்பட்டிருந்தது.
பாதரசத்தை இந்தக் குழாயின் ஒருவழியாக ஊற்றினார் பாயில். பாதரசம் இரு குழாய்களிலும் சிறிது மேலேறும் வரை ஊற்றப்பட்டது. இதனால் ஒரு குறிப்பிட்ட அளவு காற்று அடைக்கப்பட்ட பகுதியில் சிக்கிக் கொண்டது. பிஸ்டன் என்பது காற்றைப் பிடித்து வைக்கும் ஒரு உத்தி ஆகும். இப்போது இங்கும் காற்று பிடித்து வைக்கப்பட்டதால் இது ஒரு பிஸ்டன் என்றார் பாயில்.
இப்போது பாதரசம் இருந்த இடத்தைக் குறித்துக் கொண்ட பாயில், மீண்டும் கொஞ்சம் பாதரசத்தை இந்தப் புறமிருந்து ஊற்றினார். இப்போது அந்தப் பகுதியிலிருக்கும் காற்று அழுத்தப்பட்டு இன்னும் கொஞ்சம் உயரத்திற்கு பாதரசம் ஏறியது. இப்போது பாதரசம் இருந்த இடத்தைக் குறித்துக் கொண்ட பாயில், மீண்டும் பாதரசத்தைக் அந்தக் குழாயின் கீழிருக்கும் ஒரு வால்வு மூலம் வெளியேற்றினார். இப்போது மீண்டும் பாதரசம் பழைய இடத்திற்கே வந்து நின்றது.
இதன் மூலம் காற்றின் அழுத்தம் சரிசமமானதே என்று நிரூபித்தார் பாயில். அதுமட்டுமல்ல, காற்றின் மேல் வைக்கும் எடைக்குத் தகுந்தவாறு அது கொள்ளும் கொள்ளளவும் எதிர்மறையாக மாறுகின்றது என்று கண்டறிந்தார். அதாவது மூன்று பங்கு எடையைத் தூக்கி வைத்தால், மூன்றில் ஒரு பங்கு இடத்துக்குள் காற்று நிரம்பி விடுகின்றது.
இந்த விதியின் மூலமாகப் பலப் பல அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.
பாயில்ஸ் விதி (Boyle's Law):-
ஒரு மூடிய அமைப்பில் உள்ள வளிமத்தின் வெப்பநிலை மாறாதிருக்கும் போது அதன் அழுத்தத்திற்கும் கன அளவுக்கும் உள்ள தொடர்பு எதிர் விகிதத்தில் இருக்கும் என்பதை பாயில் விதியின் மூலம்
1662 ஆம் ஆண்டில்
நிரூபித்து வெளியிட்டார்.
வெப்பநிலை T ஆகவும், வாயுவின் கன அளவு V1 ஆகவும், உள்ளபோது
அழுத்தம் P1 ஆக இருக்கும். அதே வெப்பநிலையில் வாயுவின் கன அளவு V2 ஆகவும் அதன் அழுத்தம் P2 ஆகவும் இருந்தால் இவ்விதியின்படி
P1V1 =P2v2 = மாறிலி என்று எழுதலாம் என்று விளக்கினார்.
நூல்கள்:-
தி ஸ்கெப்டிகல் கைமிஸ்ட் என்னும் நூல் வேதியியல் துறையில் மூல நூலாகக் கருதப்படுகிறது.
1660 - புதிய பரிசோதனைகள் உடலியல்-மெக்கானிக்கல்: ஏர் ஸ்பிரிங் ஆப் த ஏர் அண்ட் த எஃபெக்ட்ஸ்
விருதுகள்:-
இராயல் சொசைட்டி என்னும் அமைப்புக்கு Fellow of the Royal Society (FRS) 1663-இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மறைவு:-
உலகின் முதல் நவீன வேதியியலாளர், நவீன சோதனை அறிவியல் முறையின் முன்னோடிகளில் ஒருவரான இவர்,
டிசம்பர்-31, 1691ஆம் ஆண்டு
இலண்டன், இங்கிலாந்தில் மரணமடைந்தார்.
டிசம்பர்-31. பாயில் விதியை வெளியிட்ட அயர்லாந்து வேதியியலாளர், இயற்பியலாளர்- இராபர்ட்டு வில்லியம் பாயில் (Robert William Boyle) மறைந்த தினம்.
Reviewed by JAYASEELAN.K
on
20:59
Rating: 5
Reviewed by JAYASEELAN.K
on
20:59
Rating: 5
Tags :
DECEMBER


No comments: