Breaking

நீங்கள் சமையலின் போது தினமும் கடலெண்ணெய் பயன்படுத்துகிறீர்களா.. அப்படியெனில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.. அது பற்றி பார்ப்போம்




கடலை எண்ணெய் நீரிழிவு நோயைத் தடுக்கும். 
நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து அதிகம் உள்ளது. 
மாவுச்சத்து மர்றும் கொழுப்புகள் மாற்றத்தில் மாங்களீஸ் முக்கியப் பங்காற்றுகிறது.
கடலை எண்ணெய் சிறிதளவு எடுத்து முகம் மற்றும் கை, கால்களில் நன்கு தேய்த்து கொண்டு, சிறிது நேரம் கழித்து குளித்தால் சருமத்தில் வறட்சி நீங்கி சருமம் மிருதுவாகும்.
நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்திருகிறது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. 

பெண்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதையும் தடுக்கிறது. மிகச் சிறந்த ஆண்டி ஆக்சிடென்டாகவும் கடலை எண்ணெய் உள்ளது.
நிலக்கடலையில் உள்ள பாலிபீனால் என்ற ஆன்டி ஆக்சிடென்ட் நனக்கு நோய் வருவதைத் தடுப்பதுடன் இளமையைப் பராமரிக்கவும் உதவுகிறது.
தலைமுடிக்கு ஆரோக்கியத்திற்கும், வலுவிற்கும் அவசியமான ஒரு வைட்டமின் சத்து வைட்டமின் இ. இந்த சத்து உடலில் குறைவதால் தலைமுடி வலுவிழந்து முடிகொட்டும் பிரச்சனை ஏற்படுகிறது. 
உணவில் கடலை எண்ணெய் அதிகம் உபயோகிப்பதால் அதில் இருக்கும் வைட்டமின் இ சத்து முடிகொட்டல் பிரச்சனையை போக்கி தலைமுடி ஆரோக்கியமாகவும், நல்ல வளர்ச்சியும் பெற உதவுகிறது.
நிலக்கடலையில் உள்ள வைட்டமின் 3 நியாசின், மூளை வளர்ச்சிக்கும், ஞாபக சக்திக்கும் பெரிதும் பயனிக்கிறது. 
நிலக்கடலையில் உள்ள ஒமேகா 6 சத்து, நமது உடலின் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது.
பெண்களுக்கு மார்பக கட்டி உண்டாவதை வேர்க்கடலை தடுக்கிறது. பெண்களுக்கு பெரிதும் தேவையான போலிக் அமிலம், பாஸ்பரஸ், கால்சியம், பொட்டாசியம். துத்தநாகம், இரும்பு, வைட்டமின்கள் போன்றவை இதில் நிறைந்துள்ளன.

No comments:

Powered by Blogger.