பரோட்டா, கொத்து பரோட்டா போன்ற உணவுகள் உண்பதால் நமது உடலிற்கு பலவித தீமைகள் அறிவோம்
நாம் தினமும் ஏதாவது ஒரு வகையில் மைதா (பரோட்டா)உணவினை எடுத்துக்கொள்கிறோம். பரோட்டா, கொத்து பரோட்டா என மிகவும் ருசிகரமான உணவாக இருந்தாலும் இதை உண்பதால் நமது உடலிற்கு பலவித தீமைகள் ஏற்படுகின்றன. இப்பொழுது நாம் ஏன் மைதா உணவுகளை தவிர்க்கவேண்டும் என்பதை தெளிவாக காண்போம்.
மைதா என்பது என்ன?
மைதா என்பது கோதுமையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ஒரு வகை உணவு பொருள் ஆகும். இதில் சுத்தமாக நார்ச்சத்து இல்லை. மேலும் இதனை இரசாயன பொருட்கள் பயன்படுத்தி வெண்மையாகவும் மற்றும் சுத்தமாகவும் மாற்றுகின்றனர்.
இரத்த சர்க்கரையின் அளவினை அதிகப்படுத்தும்
மைதா வகை உணவுகளில் அதிக அளவு கிளைசெமிக் இன்டெஸ் கொண்டது.
உடல் பருமன்
மைதா வகை உணவுகளை அதிகம் எடுத்து வந்தால் உங்கள் உடலில் கொழுப்பு அதிகரிக்கும். மேலும் இது உங்களுக்கு உடல் பருமன், இருதய கோளாறு, இரத்த அழுத்தம் போன்ற உடல் உபாதைகளை கொண்டு வரும். எனவே மைதா உணவுகளை தவிர்த்து வாருங்கள்.
மலசிக்கல் பிரச்சினை ஏற்படுத்தும்
மைதாவில், கோதுமையில் உள்ள அளவுக்கு நார்ச்சத்து இல்லை . எனவே இதனை உண்டு வந்தால் உங்களுக்கு மலசிக்கல் பிரச்சினை உண்டாகும் . எனவே அடிக்கடி மைதா உணவுகளை உண்டு வருவதை தவிர்க்கவும்.
செரிமான கோளாறு
மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் செரிமான கோளாறு போன்ற பிரச்சினை ஏற்படும். ஏனெனில் இதில் ஏராளமான இரசாயனங்கள் மற்றும் வேதிப்பொருட்கள் உள்ளன. எனவே மைதா உணவினை தவிர்த்து கோதுமை உணவுகளை அதிக அளவில் சேர்த்து வாருங்கள் .
இருதய கோளாறு
மைதா உணவுகளை அதிகம் உண்டு வந்தால் உங்கள் இரத்த நாளங்களில் அதிக அளவு கொழுப்பு படியும் . முக்கியமாக உங்களின் இருதய இரத்த நாளங்களில் கொழுப்பு படிந்து உங்களுக்கு இருதய கோளாறு, இரத்த குழாய் அடைப்பு, போன்ற பலவித பிரச்சினைகள் ஏற்படும் . எனவே அதிக அளவு மைதாவினை உணவில் சேர்த்துக்கொள்வதை தவிர்த்துடுங்கள்.


No comments: