மூளை சுறுசுறுப்பு அடைந்து பலம் பெற்று, மனத்தெளிவு பெற சில எளிய சிகிச்சை உணவு முறைகள். தெரிந்து கொள்வோமா?
மனிதனின் மூளை, கண்கள் நல்ல நிலையில் இருக்க தினமும் ஒரு பெரிய நெல்லிக்காய் சாப்பிடுவது அவசியம்.
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாக சாப்பிட்டு வர மூளை பலம் பெறும்.
தூதுவளை காயை தயிரில் நனைத்து உப்பு போட்டு காயவைத்து பின்னர் உலர வைத்து வறுத்து சாப்பிட்டு வர பைத்தியம் குணமாகும்.
கறிவேப்பிலை, மஞ்சள், சீரகம் ஆகியவற்றை அரைத்து ஒரு கிராம் அளவுக்கு காலையில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் சாப்பிட்டு வர மனக் கோளாறு நீங்கும்.
மனக்கோளாறு வராமல் பாதுகாக்கும் ஒரு அருமருந்து தான் மருதாணி. ஆகவே வருடத்திற்கு இரண்டு முறையாவது கை கால்களில் மருதாணி இடுவது வழக்கமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
தாமரை பூவை நீர் விட்டுக் காய்ச்சி தினமும் மூன்று வேளை என்று 41 நாட்கள் குடித்துவர பைத்தியம், மனக் கோளாறு உள்ளவர்களுக்கு பைத்தியம் தெளிந்து மனம் தெளிவுபெறும்.
மூளை சுறுசுறுப்பாக இருக்க இலந்தை பழத்தை அரைத்து கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டு வரலாம்.
திப்பிலியை வல்லாரை சாறில் ஊற வைத்து உலர வைத்து பின் சாப்பிட்டு வர மூளை பலம் பெறும்.
நாயுருவி வேர், கரிசலாங்கண்ணி வேர் இரண்டையும் சம அளவு அரைத்து கலந்து பருகி வர மூளை நரம்பு பலம் பெற்று மூளை சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்.

No comments: