பெண்களே ஆபத்தான நேரத்தில் போலீசை அழைத்தும், தங்களை பாதுகாத்துக்கொள்வது எப்படி..?
உங்களுக்குத் தெரிந்த பெண்களுக்கும் இந்த விஷயத்தைத் தெரியப்படுத்துங்க..
ஆபத்தான நேரத்தில் 100 க்கு டயல் பண்ணி எந்த சூழ்நிலையா இருந்தாலும் சொல்லலாம்.
'100 கால் எங்களுக்கு High priority duty' முதல்ல அத அட்டன் பண்ணீட்டு தான் வேற எந்த ட்யூட்டியா இருந்தாலும் பாக்கணும்.
அதிக பட்சம் 10-15 நிமிடங்களில் போலீஸ் அங்க இருக்கும்.
சரி, பேச முடியாத சூழல். துரத்துறானுங்க. நீங்க ஓடுறீங்கனே வச்சுக்குவோம்.
Play store la ' Kavalan SOS' னு ஒரு ஆப் இருக்கு. கண்டிப்பா எல்லோரோட போன்லயும் இருக்க வேண்டிய ஆப். இதுல உங்க சொந்தக்காரங்க போன் நம்பர் 5 பேர் வரைக்கும் பதிவு செய்து வைத்துக் கொள்ளலாம்.
இந்த ஆப் ஓப்பன் பண்ணுனா ரெட் கலர்ல ரவுண்டா ஒரு வட்ட சிகப்பு நிற பொத்தான் டிஸ்ப்ளேயோட சென்டர்ல தெரியும்.
அதுல SOS னு பெரிசா எழுதிருக்கும். இத நீங்க ஆபத்து காலங்களில் அழுத்தும் போது உங்க சொந்தக்காரங்களுக்கு மட்டுமில்ல சென்னையில இருக்குற கண்ட்ரோல் ரூம், டிஸ்ட்ரிக்ட் கண்ட்ரோல் ரூம், பக்கத்துல இருக்குற காவல் நிலையம், ரோந்துல இருக்குற காவலர்கள், ஹை- வே பேட்ரோல், பைக் - பேட்ரோல் எல்லாருக்கும் நீங்க ஆபத்துல இருக்கீங்க னு 15 செகண்ட்ஸ்க்குள்ள மேசேஜ் போகும். அது மட்டுமில்ல இது GPS based. ஆபத்துல இருக்குறவங்கள எங்களால டிராக் பண்ணி ஸ்பாட்டுக்கு போக முடியும்.
ரொம்ப சீக்கிரமா உங்களுக்கு உதவி கிடைக்கும். இதெல்லாம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்த எவ்வளவோ விளம்பரம் பண்ணியும் பெருசா விழிப்புணர்வு இல்ல.
களத்துல வேலை பார்க்குற எங்களுக்கு தான் இதனால எத்தனை உயிரை பாதுகாத்துருக்கோம்னு தெரியும். So, பெண்கள் கண்டிப்பா இந்த ஆப் -ஐ டவுண்லோட் பண்ணி வச்சுக்கங்க. ஆபத்து காலங்களில் உதவும். எப்பனாலும் உதவிக்கு காவல்துறையை கூப்பிடுங்க. யாரு வந்தாலும் வரலைனாலும் போலீஸ் நாங்க வந்து நிற்போம். காவல்துறை எப்பவுமே உங்கள் நண்பன் தான் என்கிறது அந்த பதிவு. அவசர காலத்தில் எப்படி உங்களைப் பாதுகாத்துக் கொள்வது என்று முன்னெச்சரிக்கையோடு இருக்கவும்.


No comments: