Breaking

விண்வெளியிலும் அடிடாஸ் ஷூ அணிந்து செல்ல புதுமுயற்சி





ஷூ என்றதுமே நாம் இதுவரை ஓடுபவர்கள், ஜிம் செல்பவர்கள் பயன்படுத்துவது என்றே நினைத்திருப்போம். ஆனால் அடிடாஸ் நிறுவனம் சற்று மாற்றி யோசித்துள்ளது. இங்கிருந்து வின்வெளிக்குச் செல்லும் வீரர்களுக்கு ஏன் அங்குள்ள நிலைக்கு ஏற்றவாறு ஷூ தயாரிக்கக்கூடாது என புது முயற்சியில் இறங்கியுள்ளது.
தற்போது அந்நிறுவனம் அல்ட்ரா பூஸ்ட்20 என்ற புது ரக ஷூக்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஷூவின் மேல்பகுதி அடிடாஸின் பிரத்யேக ப்ரைம்நைட் ஃபைபரால் தயாரிக்கப்பட்டுள்ளது. இது ஓடும் போது கால்களில் உள்ள வியர்வையை வெளியேற்ற உதவும். அதோடு ஷூவுக்குள் வெப்பநிலையை சீர்படுத்தும்.

இந்த ஷூவில் மேல்பகுதி அனைத்து விதமான கால்களுக்கும் பொருந்தும் படி தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஷீவின் நடுப்பகுதியில் ஸ்பெஷல் ஸ்பாஞ்சுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இவை ஓடும் போது காலின் அடிபகுதியில் இருந்து உந்துதல் திறனை அளிக்கும். இது வேகமாக ஓடுவதற்கு உதவும். இப்போது இந்த ஷூக்கள் பல்வேறு நாடுகளில் விற்பனையில் உள்ளது. இதன் விலை இந்திய மதிப்பில் சுமார் 12 ஆயிரம். நாசாவின் சர்வேதச விண்வெளி நிலையத்துடன் இணைந்து அடிடாஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த ஷூ நீண்ட தூரம் ஓடுபவர்களுக்கு ஏற்றது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் நாசாவின் உதவியோடு இதனை சர்வதே விண்வெளி நிலையத்தில் இருக்கும் வீரர்களுக்கு அனுப்பிவைத்து சோதனை செய்யவுள்ளனர். இதையடுத்து விண்வெளியிலும் பல்வேறு வண்ணங்களில் ஷூக்களை அணியலாம்.

No comments:

Powered by Blogger.