நமக்கு காபி பிடிக்குமா அல்லது டீ பிடிக்குமா என்பதை அவரது மரபணுக்கள்தான் தீர்மானிக்கின்றன என்பதைப் பற்றி அறிவோம்
சுவையை தீர்மானிக்கும் மரபணுக்கள்!
ஒருவருக்கு காபி பிடிக்குமா அல்லது டீ பிடிக்குமா என்பதை அவரது மரபணுக்கள்தான் தீர்மானிக்கின்றன என்று கண்டறிந்துள்ளனர் விஞ்ஞானிகள்.
அமெரிக்காவின் நார்த்வெஸ்டர்ன் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் கியூ.ஐ.எம்.ஆர்., பெர்கோபர் மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆகியவற்றின் ஆராய்ச்சியாளர்கள் சுவை உணர்வின் உடலியல் மற்றும் மரபணு காரணிகளை 4 லட்சம் பேரிடம் ஆராய்ச்சி செய்தனர்.
அதன்படி காபியிலுள்ள கசப்பான பொருளான காபீன், கசப்புச் சுவையை உடனே கண்டுகொள்ளும் திறன் உள்ளவர்களே காபியின் சுவையையும் அது தரும் சுறுசுறுப்பையும் விரும்புவதாக தெரியவந்தது. கசப்பு சுவையை உணர மரபணுவில் மூன்று கூறுகள் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.


No comments: