நமது வீடுகளில் வெஸ்டன் டாய்லட்/இந்தியன் டாய்லட் எது சிறந்தது தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் கழிப்பறை என்பது இன்றியமையாத ஒன்றாக இருக்கிறது. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் வீட்டுக்கொரு கழிப்பறை கட்டிக்கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தை செயல்படுத்திக்கொண்டு வருகிறது மத்திய அரசு. இரண்டு வகையான கழிப்பறைகள் இந்தியாவில் இருக்கிறது. ஒன்று இந்திய கழிப்பறை, மற்றொன்று வெஸ்டன் கழிப்பறை. வளர்ந்து வரும் நாகரீகத்திற்கு ஏற்ப மேலை நாட்டு காலச்சாரத்தின் மீது காதல் கொண்டதால் வெஸ்டன் கழிப்பறையை பலர் விரும்புகின்றனர்.
இந்நிலையில், பெரும்பாலான வீடுகளில் மேற்கத்திய கழிப்பறைகளை நிறுவுகையில், இந்திய பாணி கழிப்பறையை இன்னும் பலர் விரும்புகிறார்கள்.
உடற்பயிற்சி
இந்திய கழிப்பறை குந்துதல் முறையில் மலம் கழிப்பது. இதன் மூலமாக ஒவ்வொரு நாளும் உங்களை உடற்பயிற்சி செய்ய வைக்கிறது. இது உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நல்லது. நம்மில் பெரும்பாலோர் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை அறிந்திருந்தாலும், அதைப் புறக்கணிப்பார்கள்.
இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது
இந்திய கழிப்பறையில் உட்கார்ந்திருக்கும் விதம் உங்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது மற்றும் உங்கள் கை கால்களுக்கு ஒரு சிறந்த உடற்பயிற்சி என்று கூறப்படுகிறது. இது குடல், வயிறு போன்ற உடல் பாகங்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கிறது. குந்துதல் முறை ஒரு ஆசனம் என்று கூட சொல்லுவதுண்டு.
செரிமானத்தை மேம்படுத்தும்
குந்துதல் முறை உங்கள் வயிற்றை அழுத்துகிறது. இது உங்கள் வயிற்றில் உள்ள உணவை அழுத்துவதன் மூலமும், அழுத்தம் கொடுப்பதன் மூலமும் செரிமானத்திற்கு உதவுகிறது. மேற்கத்திய பாணியிலான கழிப்பறையில் உட்கார்ந்திருப்பது நம் வயிற்றில் எந்த அழுத்தத்தையும் ஏற்படுத்தாது. வெஸ்டன் டாய்லட் மலச்சிக்கலையும் ஏற்படுத்தும்.
அதிக காகிதம், தண்ணீர்
மேற்கத்திய கழிப்பறைகளில் காகிதத்தைப் பயன்படுத்துகிறீர்கள். இது காகிதத்தை வீணாக்க வழிவகுக்கிறது. இந்திய கழிப்பறைகளில் தண்ணீர் பயன்படுத்துவதால் காகிதம் உபயோகிப்பதில்லை. இந்திய கழிப்பறைகளுடன் ஒப்பிடும்போது மேற்கத்திய கழிப்பறைகளுக்கு அதிகமான நீர் தேவைப்படுகிறது
சிறுநீர் பாதை நோய் தொற்று
மேற்கத்திய கழிப்பறைகளை விட இந்திய கழிப்பறைகள் மிகவும் சுகாதாரமானவை. பொது இடங்களில் இந்தியக் கழிப்பறைகளுக்கு செல்வது சௌகரியமானது. ஏனென்றால், இந்திய கழிப்பறைகளில் உள்ள கழிப்பறை இருக்கையுடன் உங்கள் உடலுடன் நேரடி தொடர்பு இல்லை. ஆனால், வெஸ்டன் டாய்லட்டில் உங்கள் உடலுடன் நேரடி தொடர்பு இருக்கும். இது சிறுநீர் பாதை நோய் தொற்றை ஏற்படுத்தும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்லது
இந்திய கழிப்பறைகளை கர்ப்பிணிப் பெண்கள் பயன்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். ஒரு கர்ப்பிணிப் பெண் இந்திய கழிப்பறையில் அமர்ந்திருக்கும்போது கருப்பையில் எந்த அழுத்தமும் ஏற்படாது. இந்திய கழிப்பறையை தவறாமல் பயன்படுத்துவதால் கர்ப்பிணிப் பெண்கள் இயற்கையான பிரசவத்திற்குத் தயாராக இருக்கிறார்கள் என்று கூட கூறுகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்கிறது
இந்திய கழிப்பறையில் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு மிகமிக குறைவு. ஆனால், வெஸ்டன் டாய்லட்டில் மலச்சிக்கல் ஏற்பட வாய்ப்பு அதிகம். நம் உடலில் உள்ள பெருங்குடலில் இருந்து மலத்தை முழுமையாக வெளியேற்ற ஸ்குவாட்டிங் உதவுகிறது. இது மலச்சிக்கல், குடல் அழற்சி மற்றும் பெருங்குடல் புற்றுநோயை ஏற்படுத்தும் பிற காரணிகளைத் தடுக்கிறது.
குழந்தைகளுக்கு எளிதானது
இந்திய கழிப்பறைகளின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், இதை குழந்தைகள் எளிதாக பயன்படுத்தலாம். இது மேற்பரப்புடன் இணைக்கப்பட்டுள்ளதால், குழந்தைகள் வயதை அடையும் வரை யாருடைய உதவி இல்லாமல் தானாகவே அதைப் பயன்படுத்தலாம். ஆனால், வெஸ்டன் கழிப்பறையில் குழந்தைகள் விழுந்துவிடும் அபாயம் உள்ளது. நாம் இந்தியக் கழிப்பறை முறையை பயன்படுத்துவதால், ஏற்படும் நன்மைகள் ஏராளம் உள்ளன.


No comments: