பூமியின் மிக ஆழமான பகுதி கண்டுபிடிப்பு...
பூமியின் மிக ஆழமான பகுதி எது? கூடிய விரைவில் சிவில் சர்வீஸ் மற்றும் குரூப் 1 போட்டித் தேர்வுகளில் இப்படி ஒரு கேள்வி இடம்பெறலாம். ஏனெனில், அப்படியொரு இடம் வெகு சமீபத்தில் தான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பூமியின் மிக ஆழமான இடம் என்பதை நாம் இருவகையில் பொருள் கொள்ளலாம். ஒன்று நிலப்பரப்பை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு ஆழமான பகுதியைக் கண்டறிவது. மற்றொன்று பெருங்கடல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு பூமியின் ஆழமான இடத்தைக் கண்டறியும் முறை. இதில், இரண்டாவதை முன்பே சாத்தியப் படுத்தி விட்டார்கள் நம் விஞ்ஞானிகள். ஆயினும் முதலில் சொல்லப்பட்ட வகையில் நிலப்பரப்பை மட்டும் கணக்கில் எடுத்துக் கொண்டு மிக ஆழமான பகுதியைக் கண்டறியும் முறை இப்போது தான் சாத்தியமாகியுள்ளது.
சரி நிலப்பரப்பில் எதுவெனத் தெரிந்து கொண்டோம். அப்படியே பெருங்கடல்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு அளந்தால் பூமியின் மிக மிக ஆழமான இடமாகக் கருதப்படுவது எது தெரியுமா? சாக்கடலின் (Dead Sea) மையத்தில் அப்பகுதி இருப்பதாக முன்பே விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனராம். கடல் மட்டத்தில் இருந்து அதன் ஆழம் 1355 அடியாகக் கணக்கிடப்பட்டுள்ளது

No comments: